கொரோனாவால் இறந்த மருத்துவர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் – முதல்வர் ஸ்டாலின் அதிரடி!!!

1

கொரோனா சிகிச்சை பணியின் போது உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

25 லட்சம் இழப்பீடு : தமிழக அரசு அறிவிப்பு

கொரோனாவுக்கு எதிரான பணியின் போது, நோய் தொற்று ஏற்பட்டு பலியான முன்கள பணியாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.26 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலை காலத்தில் பணியாற்றி வரும் மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் கொரோனா பரவலை தடுக்க போராடும் காவலர்கள் என முன்கள பணியாளர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உயிரிழந்தும் உள்ளனர்.

அதை தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த முன்கள வீரர்கள் 28 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சத்தை நிவாரணமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் ஏப்ரல், மே, ஜூன் மாத காலத்திற்கு மருத்துவர்களுக்கு ஊக்க தொகையாக ரூபாய் 30,000 அளிக்கப்படும் என்றும் செவிலியர்களுக்கு ரூபாய் 20,000 இதர பணியாளர்களுக்கு 15,000 தரப்படும் என்றும் கூறியுள்ளார். பட்டமேற்படிப்பு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்களுக்கு ரூபாய் 20, 000 தரப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here