‘அர்பணிப்புணர்வுடன் செயல்படும் செவிலியர்களுக்கு நன்றி’ – செவிலியர் தின வாழ்த்துக்களை தெரிவித்த ஸ்டாலின்!!

0

ஆண்டு தோறும் மே மாதம் 12ம் தேதி உலக செவிலியர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது இன்று உலக செவிலியர் தினம் என்பதால் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

உலக செவிலியர் தினம்:

நாட்டின் நலனை மிக பாதுகாப்பாக வைத்திருக்க மிக கடுமையாக போராடுபவர்களுள் செவிலியர்களும் ஒருவர். ஆண்டு தோறும் மே மாதம் 12ம் தேதி மிக சிறப்பாக செவிலியர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கொரோனா காலம் என்பதனால் இதனை சரி செய்வதற்கு இருபால் செவிலியர்கள் மிக கடுமையாக போராடி வருகின்றனர்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அவர்கள் அனைவரும் தங்கள் குடும்பங்கள், சந்தோசங்களை மறந்து நமது நாடு மற்றும் நாட்டு மக்களின் நலனிற்காக போராடி வருகின்றனர். இதனை தொடர்ந்து இன்று உலக செவிலியர் தினம் என்பதால் மக்கள் அனைவரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து நன்றியையும் தெரிவித்து வருகின்றனர். தற்போது அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் ஆக்சிஜன் பஸ் சேவை அறிமுகம் – கொரோனா நோயாளிகள் வரவேற்பு!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி அவர் கூறியதாவது, முன்கள வீரர்களாக கடமையாற்றும் இருபால் செவிலியர்களுக்கு எனது நன்றி. மேலும் பேரிடர் காலத்தில் அர்பணிப்புணர்வுடன் செயல்படும் செவிலியர்களின் நலன் மற்றும் உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்படும் என்று கூறி உலக செவிலியர் தினத்திற்கான தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here