பெங்களூருவில் ஆக்சிஜன் பஸ் சேவை அறிமுகம் – கொரோனா நோயாளிகள் வரவேற்பு!!

0
A volunteer arranges oxygen cyclinders inside a bus converted to provide oxygen to Covid-19 coronavirus patient with breathing problems while waiting to be admitted at government hospital on May 5, 2021. (Photo by Arun SANKAR / AFP)

நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைக்காக வழங்கப்படும் ஆக்சிஜனுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு தற்போது கர்நாடக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆக்சிஜன் பேருந்து:

இந்தியா முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் கோரத்தாண்டவத்தால் பல தரப்பு மக்கள் தங்களது உயிரை இழந்து வருகின்றனர். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் விகிதம் மற்றும் பாதிக்கப்படுபவர்களின் விகிதம் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இதனால் அனைத்து மாநிலத்திலும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஒரு பக்கம் கொரோனா தொற்று பாதித்தால் மறுபக்கம் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் நோயாளிகள் குவிந்து வருகின்றனர். மேலும் சில பகுதிகளில் கொரோனா நோயாளிகள் ஆம்புலன்சில் காத்திருக்கும் அவல நிலையும் தற்போது நாட்டில் ஏற்பட்டு வருகிறது.

கடன் தவணை செலுத்த கால அவகாசம் – ஆர்.பி.ஐ.,யின் சுற்றறிக்கை எப்போது அமல்?

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

தற்போது இதனை தடுக்க கர்நாடக அரசு புதிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதன்படி பெங்களூரு பகுதியில் ஆக்சிஜன் பேருந்து சேவையை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஆக்சிஜன் வசதியை பெற்ற இந்த பேருந்துகள் மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கு பலர் தங்களது வரவேற்பை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here