பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு.., இதற்கு அனுமதி கிடையாது.., கோவில் நிர்வாகம் அறிவிப்பு!!!

0
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு.., இதற்கு அனுமதி கிடையாது.., கோவில் நிர்வாகம் அறிவிப்பு!!!
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு.., இதற்கு அனுமதி கிடையாது.., கோவில் நிர்வாகம் அறிவிப்பு!!!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் இப்போது பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அலைமோதி வருகிறது. மேலும் தைப்பொங்கல் நெருங்கி வரும் சூழலில் பலரும் முருகனுக்கு மாலை அணிந்து பல நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது மாற்றுத்திறனாளி, முதியோர் போன்றவர்கள் படியில் ஏறி முருகனை தரிசிக்க முடியாத சூழல் உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால் இவர்களது சிரமத்தை போக்கும் வகையில் ரோப் கார் மற்றும் மின் இழுவை ரயில் ஆகியவை பழனி கோயிலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த ரோப் காரில் பக்தர்கள் பயணிக்கும் போது எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படக் கூடாது என்பதற்காக தினமும் ஒரு மணி நேரம் மற்றும் மாதத்திற்கு ஒரு நாள் ரோப் காரில் பராமரிப்பு பணிகள் நடைபெறும். அதன்படி இன்று ரோப் காரில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ரோப் கார் சேவை இன்று ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தியன் சூப்பர் லீக் 2023: அடி பணிந்த சென்னை…, அசத்திய மும்பை அணி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here