#INDvsAUS ரோஹித் புதிய சாதனை – குவியும் பாராட்டுகள்!!

0

தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில் துவக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மா களமிறங்கினர். மிகவும் பொறுமையாக விளையாடிய இவர் இந்த போட்டியின் போது 1 சிக்சர் அடித்தார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 100 சிக்ஸர் அடித்த சாதனையை படைத்துள்ளார்.

ரோஹித் சர்மா:

கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியின் போது ஏற்பட்ட காயத்தினால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான சுற்றுப்பயணத்தில் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை. அதன் பின்பு கடுமையாக உடற்பயிற்சி மேற்கொண்டு தனது உடல் எடையையும் குறைத்த அவர் பெங்களுருவில் நடந்த உடற்தகுதி தேர்வில் தனது பிட்னஸை நிரூபித்தார். அதன் பிறகு இவர் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல பிசிசிஐ அனுமதி அளித்தது. ஆஸ்திரேலியா சென்ற அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்த பட்டார். ஏற்கனவே 2 டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில் ரோஹித் சர்மா 3 வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

100 வது சிக்ஸர்:

ரசிகர்களின் எதிர்பார்ப்பை போலவே ரோஹித் சர்மா 3 வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கினர். இன்று தனது முதல் இன்னிங்க்ஸை துவக்கிய இந்தியா அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் சுப்மங் கில் இருவரும் துவக்கம் கொடுத்தனர். இவர்கள் இருவரும் இணைந்து விளையாடுவது இதுவே முதல் முறை. ஆனாலும் இவர்களது ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. இந்த ஜோடி தனது முதல் போட்டியில் 70 ரன்களை பார்ட்னெர்ஷிப்பில் குவித்துள்ளது.

மாஸ்டர் திரைப்படத்தை இணையத்தில் வெளியிட தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு!!

ரோஹித் சர்மா சுமார் 1 ஆண்டு காலம் கழித்து சர்வதேச போட்டிகளில் விளையாடுகிறார். இந்த போட்டியில் அதிக ரன்கள் அடிக்காவிட்டாலும் இந்த போட்டியில் தனது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இந்த போட்டியின் மூலம் ரோஹித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இந்த போட்டியில் அவர் ஓர் சிக்ஸ் அடித்தார், அதன் மூலம் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மட்டும் 100 சிக்ஸர் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். தற்போது இவருக்கு ரசிகர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here