திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி – நீதிமன்றம் உத்தரவு!!

0
theatre reopen

வரும் ஜனவரி 11 ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் தான் இயங்க வேண்டும் என மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திரையரங்குகளில் 100% இருக்கைகளை அனுமதிப்பது கொரோனா பரவலை அதிகரிக்க செய்யும் என்று மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

குறைந்த இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி

திரைத்துறையினர் தமிழக முதல்வரிடம் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதிக்கும்படி கோரிய விண்ணப்பத்திற்கு பதிலளிக்கும் வகையில் வரும் பொங்கல் தினத்தை ஒட்டி தமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவீதம் இருக்கைக்கு அனுமதியளித்துள்ளது தமிழக அரசு. இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் ஏற்கனவே தங்களது எதிர்ப்புகளை பதிவிட்டுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

Theatre owners urge government to reopen cinemas before Dussehra

இதையடுத்து வரும் ஜனவரி 11 ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் 50% இருக்கைக்களுடன் தான் செயல்படவேண்டும் என மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

100 சதவீத இருக்கைகள்

திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் மனுவாக தாக்கல் செய்தால் விசாரணை செய்யலாம் என மதுரை கிளை அறிவித்திருந்த நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஆனந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

‘எனக்கும் ஆரிக்கும் இருக்க சண்டையை யூஸ் பண்ணிக்கிறிங்க’ – பாலாவின் பதிலடியால் மிரண்டு போன போட்டியாளர்கள்!!

வழக்கு விசாரணையில் 50% இருக்கைகளுடன் அனுமதிக்கும் பட்சத்தில் காட்சிகளை அதிகப்படுத்துவது பற்றிய தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளது. மேலும் இந்த உத்தரவை குறித்து தமிழக அரசு பரிசீலித்து வரும் திங்கள் கிழமைக்குள் சரியான முடிவை எடுக்க வேண்டும். அப்படி எடுக்காவிட்டால் நீதிமன்றமே உத்தரவு பிறப்பிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 100% இருக்கைக்கு அனுமதி அளித்துள்ளதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 100% பார்வையாளர்களை அனுமதித்தால் கொரோனா பரவல் அதிகமாகும். எனவே இந்த அனுமதியை திரும்ப பெறவும் வலியுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here