14வது ஐபிஎல் தொடர் – கேதர் ஜாதவை கழட்டி விட சிஎஸ்கே திட்டம்!!

0

வரும் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் ஐபிஎல் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதற்கான மினி ஏலம் அடுத்த மாதம் நடக்கும். தற்போது அனைத்து அணி நிர்வாகமும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை கழட்டி விட்டு வருகின்றனர். தற்போது சி.எஸ்.கே அணியில் இருந்து கேதர் ஜாதவை கழட்டி விட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சி.எஸ்.கே:

ஐபிஎல் போட்டியில் அனைவராலும் கவரப்பட்ட அணி என்றால் அது சி.எஸ்.கே தான். மேலும் இந்த அணியின் கேப்டனாக தோனி உள்ளார். சி.எஸ்.கே அணி என்றாலே ரசிகர்களுக்கு மிக பிடித்த விஷயம் என்றால் அது தல மற்றும் சின்ன தல ஜோடி தான். சி.எஸ்.கே அணிக்கு கடந்த ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாக அமைந்தது. காரணம் கடந்த ஆண்டு நடத்த ஐபிஎல் போட்டியில் சி.எஸ்.கே அணி பிலே ஆஃப் கூட முன்னேறாமல் லீக் போட்டிகளில் வெளியே சென்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் சி.எஸ்.கே அணியின் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்தார்கள். மேலும் கடந்த ஆண்டு சின்ன தல போட்டியில் பங்கேற்கவில்லை. இப்படி பல விஷயங்களால் ரசிகர்கள் வருத்தமடைந்தனர். மேலும் சி.எஸ்.கே அணி தான் விளையாடிய 11 சீசனில் இதுவே முதல் முறையாக பிலே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறுவது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ரெய்னா சி.எஸ்.கே அணியில் இடம் பெறுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் வைத்து 14 வது சீசன் ஐபிஎல் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. மேலும் ஐபிஎல் போட்டிக்கான மினி ஏழம் அடுத்த மாதம் 11ம் தேதி அன்று தொடங்கும் என்று அறிவித்துள்ளது. மேலும் போட்டியில் பங்கேற்கும் அணிகள் அனைத்தும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களின் பெயரை வரும் ஜனவரி மாதம் 21ம் தேதிக்குள் அறிவிக்கவேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

விடுவிக்கப்பட்ட கேதர் ஜாதவ்:

தற்போது சி.எஸ்.கே அணியில் இருந்து கேதர் ஜாதவ் கழட்டிவிட பட்டதாக தெரிகிறது. காரணம் சி.எஸ்.கே அணி நிர்வாகம் இவரை 7.8 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து. ஆனால் இவர் கடந்த சீசனில் சுமாராகவே விளையாடி வந்தார். கடந்த சீசனில் இவர் 6 போட்டிகளில் விளையாடி வெறும் 62 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இவர் அதில் 1 சிக்ஸர் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி – நீதிமன்றம் உத்தரவு!!

எனவே கண்டிப்பாக இவரை சி.எஸ்.கே அணி கண்டிப்பாக கழட்டிவிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவரை மட்டும் அல்லாமல் அந்த அணியில் உள்ள ஹர்பஜன் சிங்க், இம்ரான் தாஹிர், சாவ்லா ஆகியோரையும் விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சென்னை அணியின் அதிரடி ஆட்டக்காரர் வாட்சன் ஓய்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here