பிராமண அர்ச்சகர்களை திருமணம் செய்யும் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதி – மாநில அரசு அதிரடி திட்டம்!!

0
funds for brahmins
funds for brahmins

ஏழை பிராமண அர்ச்சகர்களை திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு 3 லட்சம் வரை அரசி சார்பில் நிதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் பிரமாண மாணவர்களுக்காக அரசு 14 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.

ஏழை பிரமணர்களுக்கான வசதிகள்:

கர்நாடக மாநில அரசிடம் அந்த மாநிலத்தின் பிராமணர் நல வாரியம் இரெண்டு விதமான திருமண திட்டங்களை துவங்க கோரிக்கை வைத்திருந்தது. இதனை பரிசலித்த அரசு தற்போது அவர்கள் வழங்கியிருந்த கோரிக்கைகளுக்கு ஒப்புதலும் வழங்கியுள்ளது. அந்த இரண்டு கோரிக்கைகள் என்னவென்றால், பொருளாதார அளவில் ஏழையாக இருக்கும் பிராமண ஆச்சாரிகளை திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு 3 லட்சம் மதிப்புள்ள நிதி பத்திரங்களை வழங்க வேண்டும்.

14வது ஐபிஎல் தொடர் – கேதர் ஜாதவை கழட்டி விட சிஎஸ்கே திட்டம்!!

மற்றொரு கோரிக்கை, பொருளாதார ரீதியாக ஏழையாக இருக்கும் பிராமண குலத்தை சேர்ந்த 550 பெண்களுக்கு திருமணத்திற்கு என்று 25,000 ரூபாய் வழங்க வேண்டும். இந்த இரு திட்டங்களுக்கும் அருந்ததி மற்றும் மைத்ரேய் என்று பெயர் வழங்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையான 6 கோடியில் மூன்று சதவீதம் பேர் பிராமணர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்த திட்டங்கள் குறித்து பிராமண மேம்பாட்டு வாரியத் தலைவர் எச் எஸ் சச்சிதானந்த மூர்த்தி கூறியதாவது, ” இந்த திருமண திட்டங்கள் கடந்த 2018 – 2019 ஆம் காலகட்டத்தில் கர்நாடகாவில் முதல்வராக குமாரசாமி இருந்த போதே செயல்பட அரசு சார்பில் 2.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது இந்த திட்டங்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. பொருளாதார ரீதியாக பின்தங்கி இருக்கும் குடும்பங்களுக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here