
வருடந்தோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் மூலம், திறமையான வீரர்களை இனம் கண்டு அவர்களுக்கு பிசிசிஐயானது சர்வதேச இந்திய அணியில் இடம் கொடுத்து வருகிறது. இந்த வகையில், தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 16 வது சீசனில் பல வீரர்கள் தங்களது அசாத்தியமான திறமை வெளிப்படுத்தி வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதில், குறிப்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்ற ரிங்கு சிங் பினிஷராக இருந்து பல வெற்றிகளுக்கு முக்கியப் பங்கு வகித்தார். 3 அல்லது 4 விக்கெட்டுகளுக்கு களமிறங்கும் இவருக்கு, கிடைக்கும் பந்துகள் எண்ணிக்கை குறைவு தான். ஆனால், சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை விளாசி ரன்களை சேர்ப்பதுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தி அசத்தி உள்ளார்.
IPL 2023 MI vs SRH: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பவுலிங் தேர்வு!!
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் இவர், கொல்கத்தா அணி சார்பாக கடைசி 5 பந்தில் 5 சிக்ஸர்களை விளாசி, வெற்றியை தேடி தந்து ஒரே நைட்டில் மிகவும் பிரபலமானார். இதன் தொடர்ச்சியாக, லக்னோ அணிக்கு எதிராக 33 பந்தில் 67* குவித்து அசத்தினார். இவரது இந்த திறமையான ஆட்டத்தினால், விரைவில் இந்திய அணியில் இடம் பிடித்து பினிஷராக தன்னை நிலை நிறுத்திக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.