காதலை சேர்த்து வைக்கும் லோகேஷ் கனகராஜ்…, லியோ படம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்!!

0
காதலை சேர்த்து வைக்கும் லோகேஷ் கனகராஜ்..., லியோ படம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்!!
காதலை சேர்த்து வைக்கும் லோகேஷ் கனகராஜ்..., லியோ படம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்!!

தென்னிந்திய திரையுலக ரசிகர்கள் மத்தியில், நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் லியோ படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே தான் உள்ளது. இதற்கு ஏற்றார் போல, லியோ படம் குறித்த அப்டேட்டும் அவ்வப்போது வெளியாகிய வண்ணம் உள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய், நடிகை த்ரிஷா, ப்ரியா ஆனந்த், கௌதம் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன்,மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

வரும் ஜூன் மாதம் இறுதிக்குள் இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தையும் முடிக்க உள்ளதாகவும், அக்டோபர் 19ம் தேதியன்று திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில், கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய், த்ரிஷா ஜோடி இணைந்து நடித்து இருப்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

ஏய்.., வெளியே போ.., அடுத்து கோதைக்கு விழுந்த மரண அடி.., அர்ஜுன், ராகினியால் வந்த வினை!!

ஆனால், இது லோகேஷ் கனகராஜ் படம் என்பதால் ரொமான்டிக் காட்சிகள் அதிகம் இருக்காது. மாறாக ஹீரோயினை கொலை செய்யும் காட்சிகள் தான் வரும் என்ற கருத்தும் ஒரு புறம் உள்ளது. இது குறித்து, லோகேஷ் கனகராஜ் கதைக்கு எது தேவையோ அதை தான் செய்கிறேன், ஒரு படத்தில் காதலை சேர்த்தும் வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார். இதற்கிடையில், நடிகை த்ரிஷா, சஞ்சய் தத் உடன் இணைந்து போட்டோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள், லியோ படத்தில் த்ரிஷாவை கொலை செய்ய போவது சஞ்சய் தத்- தாக இருக்குமோ என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here