IPL 2023 MI vs SRH: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பவுலிங் தேர்வு!!

0
IPL 2023 MI vs SRH: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பவுலிங் தேர்வு!!
IPL 2023 MI vs SRH: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பவுலிங் தேர்வு!!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

CSK vs PBKS:

ஐபிஎல் தொடரின் 16 வது சீசனில், குஜராத் (GT), சென்னை (CSK) மற்றும் லக்னோ (LSG) ஆகிய அணிகள் பிளே சுற்றுக்கு முன்னேறிய நிலையில், மீதமுள்ள ஒரு இடத்தை பிடிப்பதற்கான லீக் போட்டி இன்று பெறுகிறது. இந்த லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியானது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியை எதிர்த்து தனது சொந்த மைதானத்தில் விளையாடுகிறது. ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகளுடன் 6 வது இடத்தில் உள்ளது.

ஹைதராபாத் அணிக்கு எதிரான இந்த போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்றால், மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை எதிர்பாரமால் நேரடியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இதனால், இந்த போட்டி 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக உள்ளது. இதில், தோல்வி அடைந்தால் மும்பை அணி லீக் சுற்றோடு வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

நேரம்: மதியம் : 3.30 PM

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமா

இரு அணிகளின் பிளேயிங் லெவன்:

மும்பை இந்தியன்ஸ் (பிளேயிங் லெவன்): ரோஹித் சர்மா(சி), இஷான் கிஷன், கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நேஹால் வதேரா, கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப், குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (பிளேயிங் லெவன்): மயங்க் அகர்வால், விவ்ராந்த் சர்மா, ஐடன் மார்க்ரம்(சி), ஹென்ரிச் கிளாசென், ஹாரி புரூக், நிதிஷ் ரெட்டி, கிளென் பிலிப்ஸ், சன்விர் சிங், மயங்க் டாகர், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்

டாஸ்:

இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் பேட்டிங் செய்ய தயாராகி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here