“தளபதி 68” படத்தில் இயக்குனர் இவர் தான்?? அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியீடு!!!

0
"தளபதி 68" படத்தில் இயக்குனர் இவர் தான்?? அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியீடு!!!

தென்னிந்திய மட்டுமல்லாமல் உலக அளவில் ரசிகர் பட்டாளங்களை வைத்திருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் நடித்து வரும் “லியோ” திரைப்படம், அக்டோபர் 19ம் தேதி திரைக்கு வர இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அதிரடி ஹிட் பெற்ற “மாஸ்டர்” படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் விஜய் கைகோர்த்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் “லியோ” படம் உற்சாக காத்திருப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் தடாலடியாக நடிகர் விஜய்யின் “தளபதி 68” இயக்க இருப்பதாக தகவல் வெளிவந்தது. இந்நிலையில் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தான் “தளபதி 68” இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

AGS நிறுவனம் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இப்படி “தளபதி 68” குறித்து உறுதியான அப்டேட் வெளிவந்துள்ளதால் ரசிகர்கள் நல்ல வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here