தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது?? நிதி அமைச்சர் பரபரப்பு!!!

0
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது?? நிதி அமைச்சர் பரபரப்பு!!!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது?? நிதி அமைச்சர் பரபரப்பு!!!

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 2004 ஆம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய பங்களிப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதில் நிலையான ஓய்வூதியம் கிடைக்காததால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதையடுத்து 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வாக்குறுதியாக மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என குறிப்பிட்டு இருந்தனர். தி,மு.க. ஆட்சி பொறுப்பேற்று 2 வருடங்கள் ஆகியும் இத்திட்டத்தை செயல்படுத்தாமல் உள்ளது என பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதிதாக நிதி அமைச்சராக பதவியேற்ற தங்கம் தென்னரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அரசு ஊழியர்களின் நலன் கருதி அகவிலைப்படியை 42 சதவீதமாக உயர்த்தினார். புதிய பங்களிப்பு திட்டத்தில் சீரமைக்க மத்திய அரசு குழு அமைத்து செயல்படுத்தி வருகிறது. எனவே பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து உரிய நேரத்தில் அரசு முடிவெடுக்கும் என அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here