பழைய 100, 10 மற்றும் 5 ரூபாய் நோட்டுகள் நீக்கம் – ரிசர்வ் வங்கி முடிவு!!

0

இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் 100, 10 மற்றும் 5 ரூபாய் நோட்டுகளை பயன்பாட்டிலிருந்து குறைக்க ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது. புதிய நோட்டுகள் புழக்கத்தை அதிகரிக்க இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

பயன்பாட்டில் புதிய நோட்டுகள்

இந்தியாவில் புதிய ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் பழைய 100, 5 மற்றும் 10 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து நீக்கப்போவதாக ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே 100 ரூபாய் புதிய நோட்டுகள் மக்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இருந்தாலும் பழைய ரூபாய் நோட்டுகளை முற்றிலுமாக குறைப்பதற்கான நடவடிக்கையாக இது இருக்கும் என கருதப்படுகிறது.

அப்பா பற்றி கேட்கும் சௌந்தர்யா, அம்மா பற்றி கேட்கும் ஹேமா – தடுமாற்றத்துடன் பாரதி மற்றும் கண்ணம்மா!!

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு சமூகவலைதளங்களில் முற்றிலும் மாறுபட்ட கருத்து ஒன்று வெளியானது. பழைய 100 ரூபாய் நோட்டுகள் செல்லாது என சமூகவலைத்தளங்களில் ஒரு கருத்து பரவிவருகிறது. ரிசர்வ் வங்கி சார்பில் ‘ இந்த கருத்து முற்றிலும் தவறானது. பழைய ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டை தான் குறைக்க முடிவெடுத்துள்ளோம். தவிர மற்ற ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் பயன்பாட்டில் இருக்கும் 10 ரூபாய் நாணயங்கள் பொதுமக்களை சென்று சேர வேண்டும். இதற்கான பயன்பாட்டை அதிகரிக்க பழைய 10 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து நீக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக மாநில நாணய நிர்வாகக்குழு மற்றும் பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றுடன் நடைபெற்ற கூட்டத்தில் இத்தகைய பழைய ரூபாய் நோட்டுகளை திருப்பி செலுத்தும் பணியானது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்குள் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here