கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு இப்படி ஒரு சிக்கலா?

0

இந்தியாவில் இன்றைய நிலவரப்படி ஒன்பது ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்தாலும், மறுபக்கம் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று குணமடைந்து வருகிறார்கள்.

கொரோனா

நாள்தோறும் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகிறார்கள். கொரோனா பாதித்தது முதல் தனிமைப்படுத்துதல், சிகிச்சை போன்றவற்றால் மனதளவில் பாதிக்கப்பட்டு, இறுதியாக குணமடைந்து வீடு திரும்புவோருக்கு அடுத்த சிக்கல் காத்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

சினாவில் 18, 264 பேருக்கு சிகிச்சை ...

இதற்கு உதாரணம், மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரியைச் சேர்ந்த இளைஞர், கொரோனா பாதித்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டார். ஆனால், தன்னால், தனது வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

Coronavirus in Kerala: केरल में कोरोना वायरस ...

இது குறித்து அவர் கூறுகையில், “எனது குடும்பத்தார் நடந்து சென்ற வழியில், யாரும் நடந்து போகக் கூடாது, அப்படி போனால் அவர்களுக்கும் கரோனா வந்து விடும் என்று தங்களது அக்கம் பக்கத்தினர் கூறுவதாகவும், எங்கள் வீட்டுக்கு தினமும் பால் விநியோகித்து வந்தவரிடமும் இதுபோலக் கூறியதால் அவரும் பால் விநியோகிப்பதை நிறுத்திவிட்டார். நாங்கள் வாழ்வதற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதே சிக்கலாகிவிட்டது. நாங்கள் இங்கிருந்து செல்கிறோம்” என்று கலக்கத்தோடு கூறுகிறார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here