‘மக்கள் நீதி மய்யத்தில் கமலஹாசனே நிரந்தர தலைவர்’ – பொதுக்குழு முடிவு!!

0

மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவராக கமல்ஹாசனே இருப்பார் என்று அக்கட்சியினை சேர்ந்த நிர்வாகிகளும் உறுப்பினர்களுக்கும் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று நடைபெற்று வரும் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

மக்கள் நீதி மய்யம்:

நடிகர் கமலஹாசனின் கட்சியான மக்கள் நீதிமய்யத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்திலுள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இன்று காலை 11 மணியிலிருந்து நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கமலஹாசனுடன் மாவட்ட நிர்வாகிகள், செயல்பாட்டாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் முக்கியமான 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுளன. அதன்படி கமலஹாசனே கட்சியின் நிரந்தர தலைவராக இருப்பர் எனவும், தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு, வியூகம், கட்சி தொடர்பான முக்கிய முடிவுகள், தேர்தல் கூட்டணி போன்ற முக்கிய முடிவுகளை இனி அவர் மட்டுமே எடுப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

பிரபல மலையாள நடிகை அனுபமாவுக்கு திருமணமா?? வைரலாகும் புகைப்படம்!!

மேலும் முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம், அதன் பிறகு கொடநாடு எஸ்டேட்டில் நடந்த மர்ம மரணங்கள் பற்றிய விசாரணையை நடத்தி வெளிக்கொண்டு வரவும், தமிழக அரசு வாங்கியுள்ள கடன்கள் குறித்து வெள்ளையறிக்கை வெளியிட கோரியும், ராஜீவ்காந்தி கொலையில் தொடர்புடைய 7 பேர்களை விடுதலை குறித்து பிற கட்சிகளுடன் சேர்ந்து மத்திய அரசை வலியுறுத்தும் நடவடிக்கைகள் ஆகியன மிக முக்கிய தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முன்னதாக கொரோனா காலத்தில் சேவை மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அனைத்து பணியாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டதோடு “மாணவர்கள் தாமாக முன்வந்து சமூக பங்காளிப்பை ஆற்றவேண்டும்” என கமல்ஹாசன் தெரிவித்தார். இக்கூட்டம் மாலை 4 மணி வரை நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here