‘பிளாக் காபி’ குடித்தால் இதயநோய், புற்றுநோயை வராமல் தடுக்கலாம்’ – ஆராய்ச்சியாளர்கள் தகவல்!!

0

காபி அதிகம் குடிப்பவர்களுக்கு இதயநோய் பாதிப்புகள் குறைவாக உள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகிறது. மேலும் புற்றுநோயையும் தடுக்கக்கூடிய தன்மை காபியில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

காபியின் நன்மை

பொதுவாக காபி குடிப்பது உடலுக்கு நல்லதா? கெட்டதா? என கேள்வி எழுவது வழக்கம் தான். இதற்காக காபியை குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காபி குடிப்பதால் பதற்றம், படபடப்பு, தூக்கமின்மை, வயிற்றுகோளாறு ஆகிய நோய்கள் ஏற்படுவதாக மக்களிடையே கூறப்படுகிறது. அதிகமான மக்கள் காபி குடிப்பது நல்லதல்ல என்ற கருத்து அதிகமாக காணப்படுகிறது. என்றாலும் காபி தொடர்பான ஆரய்ச்சிகள் கூறும்போது, காபி குடிப்பது நல்லது என்ற கருத்தையே முன்வைக்கிறது.

‘நயன்தாரா யார்கூட ஜோடி சேர்ந்தாலும் எனக்கு பிரச்சனை இல்லை’ – மனம் திறக்கும் விக்னேஷ் சிவன்!!

காபி குடிப்பது உடல்நலத்தை மேம்படுத்தி ஆரோக்கியமாக இருக்க உதவும் என ஆய்வுகள் கூறுகிறது. குறிப்பாக காபி குடிக்கும் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைவாக உள்ளது எனவும் காபி அருந்தும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைவு எனவும் ஆய்வு முடிவுகள் கூறுகிறது. மேலும் காபி அருந்துவது மனஅழுத்தத்தை குறைக்கிறது எனவும் இதய செயலிழப்பு ஏற்படுவது குறைந்துள்ளது எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஒரு நாளைக்கு ஒரு கப் காபி அருந்துபவர்களுக்கு 5 முதல் 12 சதவீதம் வரையும், ஒரு நாளைக்கு இரண்டு கப் காபி பருகுபவர்களுக்கு 30 சதவீதம் வரையும் இருதய செயலிழப்பு ஏற்படுவது குறைந்துள்ளது எனவும் ஆய்வுகள் கூறுகிறது. மேலும் காபியில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள், ஹார்மோனை தூண்டி எப்போதும் இளமையாகவும், சுறுசுறுப்பாகவும் வைக்க உதவுகிறதாம். காபி குடிப்பதால் மூளை சுறுசுறுப்பாகும் போது, ரத்த ஓட்டங்களை அதிகரிக்க செய்கிறது. இத்தகைய நன்மைகளை அளிக்கும் இந்த காபி பால், சர்க்கரை, டிகாஷன் சேர்த்த காபி அல்ல. பிளாக் காபியில் தான் மேற்கூறப்பட்ட சத்துக்கள் எல்லாம் அடங்கியுள்ளது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உடல்நலமுடன் இருக்க அனைவரும் ‘பிளாக் காபி’ அருந்துங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here