பிரபல மலையாள நடிகை அனுபமாவுக்கு திருமணமா?? வைரலாகும் புகைப்படம்!!

0

பிரபல மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன், கையில் மோதிரத்துடன் சமூகவலைதளபக்கத்தில் பதிவிட்ட ஒரு பதிவினால், அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதென எண்ணி அவரது ரசிகர்கள் கவலையில் இருக்கிறார்கள்.

அனுபமாவுக்கு நிச்சயதார்த்தம்

மலையாளத்தில் வெளியான ‘ப்ரேமம்’ படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார் நடிகை அனுபமா. பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி நடித்திருந்த இப்படத்திற்கு மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு மொழிகளிலும் ஏகப்பட்ட வரவேற்புகள் கிடைத்தது. இன்று வரை இந்த படத்திற்கான ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மோடியின் சென்னை பயணம் – 6000 போலீசாருடன் பலத்த பாதுகாப்பு!!

இந்த படத்தின் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் கிளிக் ஆனார் அனுபமா. தொடர்ந்து தமிழில் நடிகர் தனுசுடன் ‘கொடி’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்த அனுபமாவுக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் கிடைத்தது. மேலும் பல இளம் நடிகர்களுடன், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ள இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

IIFA விருது வழங்கும் விழாவில், சிறந்த துணை நடிகைக்கான விருதை ‘ப்ரேமம்’ படத்திற்காக பெற்றுள்ளார். மேலும் தனியார் தொலைக்காட்சியான ஜீ விருது வழங்கும் விழாவில் ‘THE GIRL NEXT DOOR’ என்ற கேட்டகிரியில் ஒரு விருதையும் பெற்றுள்ளார். தமிழில் கொடி படத்தை அடுத்து நடிகர் அதர்வாவுடன் ‘தள்ளிபோகாதே’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் அனுபமா. இந்த படத்தின் ட்ரைலர் இணையதளத்தில் வெளியாகி அதிக லைக்ஸ்களை அள்ளியது குறிப்பிடத்தக்கது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர் தற்போது சமூகவலைதளத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கையில் மோதிரத்துடன், ஒரு சிறு பெண் அவரது கையை பிடித்தவாறு உள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் engagaed என எழுதி, சில எமோஜிகளையும் பதிவிட்டுள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் அனுபமாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா? என கேட்டு புலம்பிவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here