மோடியின் சென்னை பயணம் – 6000 போலீசாருடன் பலத்த பாதுகாப்பு!!

0
modi spg
modi spg

பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகை தரவிருப்பதையொட்டி அவருக்கு 4 அடுக்கு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த பணியில் சுமார் 6 ஆயிரம் காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மோடியின் சென்னை பயணம்:

தமிழகத்தில் வரும் பிப்ரவரி 14ம் தேதியன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை வரவிருக்கிறார். அவரது வருகையையொட்டி விமான நிலையம், அடையாறு ஐ.என்.எஸ்., நேரு உள்விளையாட்டரங்கம் ஆகிய இடங்களில் நான்கு அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவிருக்கும் நிலையில், தேசிய பாதுகாப்பு படைகள், மற்றும் மத்திய மாநில உளவுத்துறை பிரிவினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக பாதுகாப்பு ஒத்திகைகள் தேசிய பாதுகாப்பு படையின் தென்மண்டல ஐஜி அலோக் வர்மா முன்னிலையில் நடத்தப்படவுள்ளன.

‘6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும்’ – கல்வி அமைச்சர் அறிவிப்பு!!

வரும் 14ம் தேதி மோடியின் பயண விபரம் வெளியாகியுள்ளது. அதன் படி காலை 7.50 மணிக்கு டில்லியிலிருந்து விமானத்தில் புறப்படும் மோடி காலை 10.35 மணியளவில் சென்னை வந்தடைகிறார். அதன் பிறகு 11 மணிக்கு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு 11.15 நேரு உள் விளையாட்டரங்கை அடைகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அங்கு பலவிதமான நலத்திட்டங்களை துவங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் உரையாற்றுகிறார். முக்கியமாக காவிரி-குண்டாறு நதிகள் இணைப்புத்திட்டம் மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவற்றை வீடியோ கான்பிரன்சிங் மூலமாக துவக்கி வைக்கிறார். அதன்பிறகு 12.35 முதல் 12.50 வரை ஓய்வெடுக்கும் மோடி மீண்டும் மக்களை சந்தித்தபடியே விமான நிலையம் சென்று அங்கிருந்து கொச்சின் செல்கிறார் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here