‘தேர்தல் கூட்டணி குறித்து கமல் முடிவெடுக்கலாம்’ – மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழுவில் முடிவு!!

0

தற்போது மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கமல் கூட்டணி கட்சி குறித்து முடிவெடுக்கலாம் என்று பொதுக்குழு நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

மக்கள் நீதி மய்யம்:

தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் வேலைகளை மிக மும்முரமாக செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் அதிகாரிகளும் தேர்தல் பணிகளை பார்ப்பதற்கும் தேர்தல் குறித்து முடிவெடுப்பதற்கும் சென்னை வந்துள்ளனர். மேலும் இந்த சட்டமன்ற தேர்தலில் கமலஹாசன் போட்டி இடுகிறார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அவர் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக போட்டி இடுகிறார். தற்போது அந்த கட்சியின் பொதுக்குழு இன்று நடைபெற்று வருகிறது. தற்போது அந்த பொதுக்குழுவில் பல முடிவுகளை எடுத்து வருகின்றனர். அதன்படி இந்த கட்சியின் நிரந்தர தலைவராக கமல் செயல்பட அந்த கட்சி பொதுக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் கடந்த சில மாதங்களாக இந்த கட்சி சார்பாக கடந்த கிராம சபை நடத்தவில்லை. அதற்கும் பொதுக்குழுவில் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

ஹாலிவுட் படத்தில் நடிக்க அமெரிக்கா பறந்த தனுஷ் – குஷியில் ரசிகர்கள்!!

தற்போது தமிழகத்தில் வரப்போகும் சட்டமன்ற தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் சார்பாக கமலஹாசன், கூட்டணி குறித்தும், கட்சியின் நிலை பாடு குறித்தும், வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம் உள்ளிட்ட முடிவுகளை கமல் எடுக்க பொதுக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் வரப்போகும் தேர்தலில் கமலை வெற்றிபெற வைத்து தமிழக முதல்வராக்க வேண்டும் இது கட்சியின் கடமையாகும் என்று தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here