ஹாலிவுட் படத்தில் நடிக்க அமெரிக்கா பறந்த தனுஷ் – குஷியில் ரசிகர்கள்!!

0

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்த தனுஷ் சில தினங்களுக்கு முன்பு ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகினார். தற்போது அந்த படத்திற்காக அமெரிக்கா செல்கிறார் தனுஷ். அதற்கான புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

தனுஷ்:

தமிழ் சினிமாவில் துவக்க காலத்தில் கஷ்டப்பட்டு தற்போது அனைத்து ரசிகர்களின் மனதில் இருப்பவர் தான் தனுஷ். தனது ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வரு விதமான காதாபாத்திரத்தை தேர்ந்தெடுப்பார். மேலும் அதற்காக இவர் செய்யும் உழைப்பு, முயற்சி ஆகியவற்றை கொண்டே இவர் தனது ரசிகர்களை தன்வசம் கட்டிப்போட்டு வைத்துள்ளார். மேலும் இவரது நடிப்பில் வெளிவந்த அசுரன் திரைப்படம் தற்போது வரை பல விருதுகளை அல்லி வருகிறது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

தனுஷின் நடிப்பு அனைத்து நாடு மக்களையும் கவர தொடங்கியுள்ளது என்று தான் சொல்லவேண்டும். ஏனெனில் இவர் தற்போது பல மொழிகளில் படங்களை நடித்து வருகிறார். மேலும் தற்போது கர்ணன் படத்தை நடித்து முடித்துள்ள தனுஷ், கார்த்திக் நரேன் இயக்கும் புதிய படத்தில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளார். இதனை நடிகை மாளவிகா மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். மேலும் தனுஷ் நேற்று தான் தனது புது வீட்டிற்கான பூமி பூஜையை நடத்தினார்.

விவசாயிகள் போராட்டம் எதிரொலி – ட்விட்டர் நிர்வாகிகளை கைது செய்ய மத்திய அரசு முடிவு!!

இதுபோல் செம பிசியாக இருந்து வரும் தனுஷ் சில தினங்களுக்கு முன்பு ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தமானார். இந்த படத்தை அவென்ஜர்ஸ், எண்டு கேம் உள்ளிட்ட படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் இயக்க உள்ளனர். இந்த படத்தின் பெயர் தி கிரே மேன் என்று அறிவித்தனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக தனுஷ் அமெரிக்கா செல்கிறார். அவர் விமான நிலையத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here