பாஸ்டேக் கணக்கில் குறைந்தபட்ச தொகை விவரம் – தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல்!!

0

சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்காக வாகன ஓட்டிகளை அனைவரையும் பாஸ்டேக் கணக்கை துவங்குமாறு மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தது. தற்போது பாஸ்டேக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பாஸ்டேக்:

தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை கடப்பதற்கு வாகன ஓட்டிகள் கட்டணம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் கட்டணம் செலுத்துவதற்கு சுங்கச்சாவடிகளில் நெடுநேரம் காத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் சில நேரங்களில் அங்கு உள்ள ஊழியர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் சில்லறை பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது. இதனை கருத்தில் கொண்டு இந்தியா தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஓர் முடிவை எடுத்தது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதன்படி இனி வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை காத்திருந்து செலுத்துவதற்கு பதிலாக பாஸ்டேக் கணக்கை துவக்கினால் சுங்க சாவடிகளில் தங்களது QR code ஐ ஸ்கேன் செய்து அதுவாகவே தனது வங்கி கணக்கில் இருந்து அதற்கான கட்டணத்தை எடுத்துக்கொள்ளும் என்ற திட்டத்தை அறிவித்தது. மேலும் பாஸ்டேக் கணக்கை வாகன ஓட்டிகள் தொடங்குவதற்கு வரும் 15ம் தேதி வரை தான் கால அவகாசத்தை கொடுத்துள்ளது. இதற்கு வாகன ஓட்டிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.

‘நயன்தாரா யார்கூட ஜோடி சேர்ந்தாலும் எனக்கு பிரச்சனை இல்லை’ – மனம் திறக்கும் விக்னேஷ் சிவன்!!

அதன்பிறகும் நாம் கணக்கை துவங்கவில்லை என்றால் இரண்டு மடங்கு கட்டணத்தை நாம் செலுத்தும் நிலை ஏற்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. தற்போது பாஸ்டேக் கணக்கில் நாம் குறைந்தபட்ச தொகையாக எவ்வளவு வைத்திருக்க வேண்டும் என்பது குறித்து இந்தியா தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஓர் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி பாஸ்டேக் கணக்கை வைத்திருப்போர் குறைந்தபட்ச தொகை எதுவும் பராமரிக்க வேண்டாம் என்று அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here