மதுரையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய அதிமுக – புகாரளித்த திமுக!!

0

மதுரையில் அதிமுக பிரச்சார பாடலான “வெற்றிநடை போடும் தமிழகமே” எனும் பாடல் தேர்தல் விதிமுறைகளை மீறி திரையரங்கில் ஒளிபரப்பட்டதாக திமுக கட்சியினர் தேர்தல் பொறுப்பாளரிடம் புகார் அளித்துள்ளது அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் விதிகள்:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நன்னடத்தை விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதனை மீறும் கட்சியினர் மீது புகார் அளிக்கப்படும் பட்சத்தில் தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மதுரை காளவாசல் பகுதியில் அமைந்துள்ள குரு தியேட்டரில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி அதிமுகவின் பிரச்சார பாடலான “வெற்றிநடை போடும் தமிழகமே ” நேற்று மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டதாக தெரிகிறது.

அரசியல் பிரமுகருடன் ஜோடி சேரும் வனிதா விஜயகுமார் – இணையத்தை கலக்கும் வீடியோ!!

இது குறித்து திமுகவின் மதுரை தெற்கு மாநகர் நெசவாளர் அணியின் அமைப்பாளர் வெள்ளைத்துரை, மத்திய தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கோட்டூர் சாமியிடம் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார். மனுவில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது இது நடந்துள்ளதாகவும், திரையரங்க உரிமையாளர் மீதும் செய்தி மற்றும் விளம்பரத்துறையின் இயக்குனர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது குறித்து தகவல் அளித்த மாவட்ட தேர்தல் துணை அலுவலர் செந்தில்குமாரி “இந்த பிரச்சினை குறித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த விளம்பரத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வேறு எந்த திரையரங்கில் இதுபோல நடக்கிறதா?? என்பதனை தொடர்ந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here