அரசியல் பிரமுகருடன் ஜோடி சேரும் வனிதா விஜயகுமார் – இணையத்தை கலக்கும் வீடியோ!!

0

நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான வனிதா விஜயகுமார் தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அரசியல் பிரமுகர் ஹரி நாடார் நடிக்க உள்ளார்.

வனிதா விஜயகுமார்:

சர்ச்சைகளுக்கு சிறிதும் பஞ்சம் வைக்காதவர் நடிகை வனிதா விஜயகுமார். திரை வாழ்விலும், பல்வேறு ஏற்ற இறக்கங்களை கண்டு வரும் வனிதா பிக்பாஸில் கலந்து கொண்டதன் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்தார். நிகழ்ச்சியிலிருந்து வெளிவந்த பிறகு மூன்றாவது காதல், கல்யாணம் என்று சர்ச்சையில் சிக்கியவர் அதன் பிறகு அதிலிருந்து மீண்டு தனது குழந்தைகளை வளர்ப்பதிலும், வேலையிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

தளபதி 65ல் விஜய்யுடன் இணையும் சிவகார்த்திகேயன் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

இந்நிலையில் பல்வேறு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வரும் அவருக்கு தற்போது ஒரு சில பட வாய்ப்புகள் வர துவங்கியுள்ளன. அவற்றில் ஒன்றுதான் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் தயாரிப்பில், இயக்குனர் முத்தமிழ் வர்மா இயக்கத்தில் உருவாகவிருக்கும் “2K அழகானது ஒரு காதல்” என்ற படம். இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் வனிதாவுக்கு பிரபல அரசியல் பிரமுகரும் பனங்காட்டுப்படை கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஹரி நாடார் ஜோடியாக நடிக்கவுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பகிர்ந்த வனிதா “2k அழகானது ஒரு காதல்” படத்தில் ஹரி நாடாருடன் இணைந்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளேன். ஹரி நாடார் எனது தூரத்து உறவினர் என்பது எனக்கு சமீபத்தில்தான் தெரிய வந்தது” என்று பதிவிட்டுள்ளார். வனிதாவின் வெள்ளித்திரை ரீ-என்ட்ரிக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here