லெஜண்ட் சரவணனின் ஆக்சன் காட்சிகள் – வைரலாகும் புகைப்படம்!!

0

பிரபல தொழிலதிபர் சரவணா செல்வரத்தினம் உரிமையாளர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இப்படத்தில் அவர் நடித்த ஆக்சன் காட்சிகளை உள்ளடக்கிய வீடியோ ஒன்று வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சரவணா செல்வரத்தினம் நடிக்கும் புதிய படம்

தமிழகத்தின் பிரபலமான தொழிலதிபர் என்றால் அது சரவணா செல்வரத்தினத்தின் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் தான். இந்த கடையின் கிளைகள் ஏறக்குறைய தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் உள்ளது. இந்த கடையின் விளம்பரமே மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்தது குறிப்பித்தக்கது.

கடையின் விளம்பரத்தில் கடையின் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் நடிகை தமன்னா மற்றும் நடிகை ஹன்சிகாவுடன் இணைந்து நடித்திருப்பார். முன்னதாக அறிவிக்கப்பட்டது போல லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் சரவணன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த ஆண்டு துவங்கிய படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது. மீண்டுமாக துவங்கியுள்ள படப்பிடிப்பின் பாடல் காட்சிக்கு மட்டும் 10 கோடி செலவானதாக தகவல்கள் வந்துள்ளது. மேலும் 100 கோடி செலவில் இந்த படம் உருவாக உள்ளது எனவும் கூறப்படுகிறது.

லெஜண்ட் சரவணன் நடிக்கும் பெயரிடப்படாத படத்தை ‘உல்லாசம்’ படத்தை இயக்கிய ஜேடி ஜெர்ரி இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான பின்னணி இசையை ஹாரிஸ் ஜெயராஜ் அமைக்கவுள்ளார். மேலும் இப்படத்தில் கீதிகா திவாரி, பிரபு, ரோபோ ஷங்கர், விஜயகுமார், நாசர், தம்பி ராமைய்யா, மயில்சாமி உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

தொடையழகை காட்டி டாப் ஆங்கிளில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ் – சொக்கிப்போன ரசிகர்கள்!!

விரைவில் ரிலீசாக உள்ள இப்படத்தில் சில ஆக்சன் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. லெஜண்ட் சரவணன் நடித்துள்ள ஆக்சன் காட்சி வீடியோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here