சனம் ஷெட்டி வெளியிட்ட காதலர் தின புகைப்படம் – யார் அந்த காதலர்? நெட்டிசன்கள் ஆர்வம்!!

0

நடிகையும், மாடலுமான சனம் ஷெட்டி பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்ட பிறகு அனைவருக்கும் பரிட்சியமானார். பிக்பாஸிலிருந்து வெளியேறிய பிறகு சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்த அவர் காதலர் தினத்தில் அவரது காதலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றினை பதிவிட அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சனம் ஷெட்டி:

பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு பிரபலமானவர் தான் நடிகை சனம் ஷெட்டி. முன்னதாக அவர் ஒரு சில தமிழ் படங்களிலும் விளம்பரங்களிலும் நடித்துள்ளார். எனினும் கூட அவர் பிக்பாஸில் கலந்து கொண்ட பிறகு தான் நிறைய ரசிகர்களை பெற்றார். பிக்பாஸ் போட்டியியல் யருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து விளையாடிய சனம் ஷெட்டி திடீரென போட்டியிலிருந்து வெளியேறினார்.

இது அவரது ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சியை கொடுத்தது. அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின் அவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்தார். தினமும் போட்டோ, வீடியோ என்று பதிவிட்டு தனது ரசிகர்களுடன் தொடர்பிலேயே இருந்து வந்தார்.

97% பேர் டிஸ்சார்ஜ், 1.4% பேர் பலி – இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு!!

இந்நிலையில் அவர் தற்போது காதலர் தினத்தில் அவரது காதலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுளார். கேண்டில் லைட் டின்னரில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில் அவரது முகம் மட்டுமே தெரிகிறது. அவரது காதலருடன் கைகோர்த்துக் கொண்டுள்ள நிலையில், அந்த காதலரின் முகம் தெரியவில்லை.

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் யார் அந்த காதலர் என்று அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர். சனம் ஷெட்டி முன்னதாக பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு பைனல் வரை சென்ற தர்சனை காதலித்து வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here