டெல்லி விவசாயிகள் பேரணியில் வன்முறை – கைது நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!!

0

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியின்போது தவறான தகவல்களை பரப்பியதாக கூறி சசி தரூர் உள்ளிட்ட பலரின் மீது உத்திரபிரதேச மாநில அரசு வழக்குபதிவு செய்தது. தற்போது குற்றம் சுமத்தப்பட்டோர்களின் மீதான கைது நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தேச துரோக வழக்கு:

டெல்லியில் தொடர்ந்து நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த ஜனவரி 2ம் தேதி குடியரசு தினத்தன்று மாபெரும் ட்ராக்டர் பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. ஆயிரக்கணக்கான ட்ராக்டர்களுடன் மத்திய டெல்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகளை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். அதை தொடர்ந்து நடந்த வன்முறையானது கண்ணீர் புகை குண்டுகள் வீசி அடக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஒரு விவசாயி இறந்ததுடன் போலீசார் பலரும் காயமடைந்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த உத்திரபிரதேச காவல் துறை வன்முறையில் ஈடுபட்டவர்களையும், அவர்களை தூண்டி விட்டவர்களையும் அடையாளம் காணும் நடவடிக்கைகளில் இறங்கியது.

கொரோனா பாதிப்பில் புதிதாக 7 அறிகுறிகள் கண்டுபிடிப்பு – சுகாதாரத்துறை திடுக்கிடும் தகவல்!!

மேலும் டிராக்டர் பேரணியின் போது உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பியதாக கூறி காங்கிரஸ் MP சசிதரூர் மீதும், வினோத் கே.ஜோஷ், ஆனந்த் நாத், சர்தேசாய் உள்ளிட்ட ஆறு பத்திரிகையாளர்கள் மீதும் தேச துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது. டிராக்டர் பேரணியின் போது அவர்கள் வெளியிட்ட கருத்துகள் மூலம் காவல்துறை மற்றும் இராணுவத்தின் மீது களங்கம் ஏற்பட்டு விட்டதாக வழக்கு பதிவின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் மேற்குறிப்பிட்டவர்களை கைது செய்ய உச்சநீதி மன்றம் இடைக்கால தடை விதித்ததோடு அவர்கள் மீதான வழக்கு பதிவிற்கு தகுந்த விளக்கம் அளிக்கும்படியும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here