குக் வித் கோமாளி பிரபலத்தின் வீட்டில் நடந்த விசேஷம் – வைரலாகும் புகைப்படம்!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளரான கனியின் தங்கையும் நடிகையுமான நிரஞ்சனிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. பிரபல இயக்குனரின் மகளான இவர் ஒரு பிரபல இயக்குனரையே திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிரஞ்சனி திருமணம்:

பிரபல இயக்குனர் அகத்தியனுக்கு மூன்று மகள்கள். அதில் மூத்தவரான கனி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் ஷோவான குக் வித் கோமாளியின் மிக முக்கிய போட்டியாளராக இருந்து வருகிறார். அவர் இயக்குனர் திருவை காதல் திருமணம் செய்து கொண்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இரண்டாவது மகளான விஜயலக்ஷ்மி சென்னை-28 படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். மூன்றாவது மகளான நிரஞ்சனிக்கு தற்போது திருமணம் நடந்துள்ளது. சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தை இயக்கியவர் தேசிங்கு பெரியசாமி.

ஓடிடி தளங்களுக்கான கட்டுப்பாடுகள் – மத்திய அரசு அறிவிப்பு!!

அப்படத்தில் நிரஞ்சனி, விஜய் டிவி ரக்சனுக்கு ஜோடியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.படப்பிடிப்பின் போது இருவருக்குள்ளும் உருவான காதல் தற்போது கல்யாணத்தில் முடிந்துள்ளது. இனிமையான நடைபெற்ற திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here