‘தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க கூடாது’ – மத்திய அரசு அதிரடி!!

0

தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க கூடாது என்று ஐகோர்ட்டில் மத்திய அரசு பிரமான பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

தன்பாலின திருமண:

இந்தியாவில் பல ஆண்டுகாலமாக வேறு பாலினத்தவர்கள் திருமணம் செய்வது தான் நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது காலம் மிக வேகமாக ஓடி கொண்டிருக்கும் சூழலில் நாம் அனைவரும் மிக வேகமாக வளர்ச்சி அடைந்த அறிவியல் உலகில் வாழ்ந்து வருகிறோம். மேலும் சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் தன்பாலின திருமணத்தை அங்கீகரிப்பது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் அதற்கு அனுமதியும் வழங்கியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது. மேலும் சிலர் இது கலாச்சாரத்திற்கு அப்பாற்பட்டது என்றும் கூறி வந்தனர். இந்நிலையில் இதுகுறித்து மத்திய அரசை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் மத்திய அரசு டெல்லி நீதிமன்றத்தில் தனது பதில் மனுவை சமர்ப்பித்தது. அதில் கூறியதாவது, ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் ஒன்றாக வாழ்வது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

‘ராஜா ராணி’ சீரியல் நடிகருக்கு ஏற்பட்ட விபரீதம் – கவலையில் ரசிகர்கள்!!

மேலும் இது இந்திய திருமண கலாச்சாரத்தின்படி ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் தன்பாலின உறவை சட்டவிரோதம் என்று அறிவித்த பிரிவு 377 தற்போது நீக்கப்பட்டாலும், இதனை அடிப்படையாக கொண்டு தன்பாலின திருமணம் எங்கள் அடிப்படை உரிமை என்றும் யாரும் கூற முடியாது என்றும் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here