3 மாதத்திற்கு பிறகு ரஞ்சி டிராபிக்கு திரும்பிய இந்திய வீரர்…, அரையிறுதிப் போட்டி இவருக்கு கைகொடுக்குமா??

0
3 மாதத்திற்கு பிறகு ரஞ்சி டிராபிக்கு திரும்பிய இந்திய வீரர்..., அரையிறுதிப் போட்டி இவருக்கு கைகொடுக்குமா??
3 மாதத்திற்கு பிறகு ரஞ்சி டிராபிக்கு திரும்பிய இந்திய வீரர்..., அரையிறுதிப் போட்டி இவருக்கு கைகொடுக்குமா??

ரஞ்சி டிராபியின் அரையிறுதி போட்டியில், மத்திய பிரதேசம் அணிக்காக இந்திய வீரர் மூன்று மாத இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பி உள்ளார்.

ரஞ்சி டிராபி:

இந்தியாவின் உள்ளூர் போட்டிகளில் பிரபலமான ரஞ்சி டிராபி கடந்த டிசம்பர் மாதம் முதல் 38 அணிகளுக்கு இடையே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த டிராபியின் லீக் சுற்றுகள் மற்றும் காலிறுதி போட்டிகள் அனைத்தும் முடிந்த நிலையில், பெங்கால், மத்திய பிரதேசம், கர்நாடகா மற்றும் சௌராஷ்டிரா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த அரையிறுதியில் இன்று, மத்திய பிரதேச அணிக்கு எதிராக பெங்கால் அணியும், சௌராஷ்டிரா அணிக்கு எதிராக கர்நாடகா அணியும் மோதி வருகின்றன. இதில், பெங்கால் மற்றும் கர்நாடகா அணி தனது முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடங்கி உள்ளனர்.

தொடர் தோல்வியில் சிக்கி தவிக்கும் சென்னை…, கேரள அணி திரில் வெற்றி!!

இந்த போட்டியில், இந்திய அணிக்காக ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடிய வெங்கடேஷ் ஐயர், மத்திய பிரதேச அணிக்காக தற்போது விளையாடி வருகிறார். காயம் காரணமாக மூன்று மாத இடைவெளிக்கு பிறகு, அணிக்கு திரும்பி உள்ள இவருக்கு இது தான் முதல் ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், இந்த ரஞ்சி டிராபியில் சிறந்த பங்களிப்பை அளிக்கும் பட்சத்தில் மீண்டும் சர்வதேச அணிக்கு திரும்ப முயற்சிப்பார் என என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here