துருக்கி, சிரியா நிலநடுக்கம் எதிரொலி…, 8,000 தாண்டும் உயிரிழப்புகள்.., அதிபர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

0
துருக்கி, சிரியா நிலநடுக்கம் எதிரொலி..., 8,000 தாண்டும் உயிரிழப்புகள்.., அதிபர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!
துருக்கி, சிரியா நிலநடுக்கம் எதிரொலி..., 8,000 தாண்டும் உயிரிழப்புகள்.., அதிபர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதால் துருக்கி அதிபர் எர்டோகன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நிலநடுக்கம்

துருக்கி, சிரியா பகுதிகளில் நேற்று முன்தினம் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் முழுவதும் சரிந்துள்ளது. இதனால் இந்த இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதில் மீட்பு பணியினர் தோண்ட தோண்ட உயிரிழந்த நிலையில் உடல்கள் மீட்கப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதுவரை 8,000க்கும் மேலானோர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டு உள்ளனர். இதனால் சர்வதேச நாடுகளும் துருக்கி, சிரியா மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை அதிநவீன சிகிச்சை கருவிகள், மருத்துவ குழு, நிவாரண பொருட்கள் என பல்வேறு உதவிகள் செய்த வண்ணம் உள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் மட்டும் 5,894 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

வாட்ஸ்அப் பயனர்களுக்கு டபுள் சர்ப்ரைஸ்.,இந்த அப்டேட்டுக்காக தான் இவ்ளோ நாளா தவம் கிடந்தோம்!!

மேலும் 34,810 பேர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் ஒரு பக்கம் குடும்பத்தை இழந்த குழந்தைகள் மறுபக்கம் குழந்தைகளை இழந்த குடும்பங்கள் என நாடே கண்ணீரில் மூழ்கி உள்ளது. இந்நிலையில் துருக்கியில் பாதிப்படைந்த 10 மாகாணங்களில் 3 மாதத்துக்கு அவசர நிலை பிரகடனம் அமல்படுத்துவதாக அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here