மீண்டும் அந்த இயக்குனருடன் கைகோர்க்கும் “அட்ட கத்தி” தினேஷ்.., ஒரு தடவை பட்டது பத்தல போலயே!!

0
மீண்டும் அந்த இயக்குனருடன் கைகோர்க்கும்
மீண்டும் அந்த இயக்குனருடன் கைகோர்க்கும் "அட்ட கத்தி" தினேஷ்.., ஒரு தடவை பட்டது பத்தல போலயே!!

அட்ட கத்தி தினேஷ் நடிக்கும் அடுத்த திரைப்படம் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அட்ட கத்தி தினேஷ்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பா.ரஞ்சித் இயக்கிய அட்ட கத்தி படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகர் தினேஷ். அதனை தொடர்ந்து தமிழுக்கு எண் 1 அழுத்தவும், குக்கூ மற்றும் கபாலி உள்ளிட்ட படங்கள் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. இவர் கடைசியாக நானும் சிங்கிள் தான் என்ற படத்தில் நடித்தார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவிற்கு கைகொடுக்கவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது ஜே பேபி, பல்லு படாம பாத்துக்க மற்றும் தேரும் போரும் போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அடுத்த நடிக்க இருக்கும் படத்தை குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது பா.ரஞ்சித் நடத்தி வரும் நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கும் “தண்டகாரண்யம்” என்ற புதிய படத்தில் அட்டகத்தி தினேஷ் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

10 வருஷம் கழிச்சு தான் இது கிடைச்சுச்சு., இதுக்காக சந்து பொந்தெல்லாம் ஓடினேன்! நடிகர் விக்ரம் உருக்கம்!!

அது போக இந்த படத்தில் கலையரசன், ஷபீர், பாலசரவணன், முத்துக்குமார், ரித்விகா, ரின்சு, அருள்தாஸ், யுவன் மயில்சாமி முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இயக்குனர் அதியன் ஆதிரை இதற்கு முன்னர் தினேஷை வைத்து இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற படத்தை கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here