ஒரு வேல பொம்பள ஜாக்கி ஜானா இருப்பாங்களோ? “சூர்யா 42” பட நடிகை செய்த செயல்..,வீடியோவை பார்த்து வியந்த ரசிகர்கள்!!

0
ஒரு வேல பொம்பள ஜாக்கி ஜானா இருப்பாங்களோ?
ஒரு வேல பொம்பள ஜாக்கி ஜானா இருப்பாங்களோ? "சூர்யா 42" பட நடிகை செய்த செயல்..,வீடியோவை பார்த்து வியந்த ரசிகர்கள்!!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 42 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை திஷா படானி செய்த சாகசம் இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

சூர்யா 42:

தமிழ் சினிமாவில் அழுத்தமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூர்யா. இவர் கடைசியாக நடித்த எதற்கும் துணிந்தவன் சரியாக ஓடாமல் மண்ணை கவ்வியது. இதனை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் வெளிவரும் இப்படத்தில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்திருப்பதை மோஷன் போஸ்டர் வழி அறிய முடிகிறது. இதில் நிறைய VFX காட்சிகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சிறுத்தை சிவாவின் கனவு படமான இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் கோவாவில் நடந்து வருகிறது.

மீண்டும் அந்த இயக்குனருடன் கைகோர்க்கும் “அட்ட கத்தி” தினேஷ்.., ஒரு தடவை பட்டது பத்தல போலயே!!

இந்த நிலையில் சூர்யா 42 பட நடிகை திஷா பதானி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதாவது நடிகை திஷா பதானி சண்டை போடும் சாகச வீடியோவை வெளியிட்டுள்ளார். ஒருவேளை இது படத்தின் சண்டை காட்சிக்காக பயிற்சி எடுக்கிறாரோ என்று ரசிகர்கள் வீடியோவை பார்த்து வியந்துள்ளனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here