செம்பருத்தி ஹீரோவுடன் படுக்கையறை காட்சியில் நடித்த ரம்யா பாண்டியன் – வைரலாகும் வெப்சீரிஸ்!!

0

விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். அவரது சிரித்த முகத்தால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற ரம்யா பாண்டியன் தற்போது செம்பருத்தி சீரியல் ஹீரோவுடன் வெப்சீரிஸில் நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளார்.

ரம்யா பாண்டியன்

தமிழில் ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். ஜோக்கர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் ரம்யா பாண்டியனுக்கு அந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு அவர் சமுத்திரக்கனி உடன் ஆண் தேவதை என்ற படத்தில் நடித்திருந்தார்.

ramya pandian
ramya pandian

அந்த திரைப்படமும் அவருக்கு அந்த அளவிற்கு புகழை தரவில்லை. 2019 இல் அவருக்கு குக் வித் கோமாளியின் வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இவரின் கனிவான நடவடிக்கை மற்றும் யாரிடமும் கோவத்தை காட்டாதது மக்கள் மனதை வெகுவாக ஈர்த்தது என்றே சொல்லலாம்.

ramya pandian
ramya pandian

அதன் பிறகு அவர் மாடியில் எடுத்து வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. 2 படங்கள் நடித்தும் கிடைக்காத பெயரும் புகழும் அவருக்கு இந்த போட்டோ ஷூட்டால் கிடைத்தது. அதன் பிறகு விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் ரம்யா பாண்டியன்.

ramya pandian

தற்போது பிக் பாஸ் சீசன் 4 இல் களமிறங்கியுள்ள ரம்யா பாண்டியன் சக போட்டியாளர்களுக்கு வலுவான போட்டியாளராக இருந்து வருகிறார். பிக் பாஸில் ரம்யா பாண்டியன் ஜெயிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறி வருகின்றனர். முதல் வாரத்திலேயே நாமினேஷனில் சிக்கி கொண்ட ரம்யா பாண்டியனுக்கு மக்கள் சப்போர்ட்டால் எலிமினேஷனில் இருந்து தப்பினார்.

ramya pandian

தற்போது அவர் நடித்த வெப்சீரிஸ் வைரலாகி வருகிறது. ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலான செம்பருத்தியில் ஹீரோவாக நடிக்கும் கார்த்தி இதில் நடித்திருக்கிறார். இதில் நெருக்கமான சில கட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here