பட்டய கணக்காளர் (CA) படிப்பிற்கு 10ம் வகுப்பு தேர்ச்சியே போதுமானது – அதிரடி அறிவிப்பு!!

0

சிஏ என அழைக்கப்படும் பட்டய கணக்காளர் படிப்பில் சேர மாணவர்கள் 10ம் வகுப்பு படித்திருந்தாலே போதுமானது என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே CA படிக்க முடியும் என்ற முறையில் தற்போது மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

பட்டய கணக்காளர்:

அக்கவுண்டன்சி பாடத்தை விரும்பி பயிலும் மாணவர்களுக்கு பட்டய கணக்காளர் (CA) படிப்பே மிகப்பெரிய லட்சியமாக இருக்கும். தற்போது இப்படிப்பில் சேர்வதற்கான தகுதியில் அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளன. ஏற்கனவே இருந்த சட்டத்தின்படி 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே, CA படிப்பில் சேர முடியும். ஆனால், இந்திய பட்டய கணக்காளர் மையம் இன்று வெளியிட்டு உள்ள அறிக்கை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

1988ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பட்டய கணக்காளர் ஒழுங்குமுறை விதிகள் 25 பிரிவில் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளது. இதற்காக மத்திய அரசாங்கம் அனுமதி அளித்துள்ள நிலையில், பட்டய கணக்காளர் படிப்பில் சேர 12ம் வகுப்பு கல்வித்தகுதியாக இருந்தது தற்போது 10ம் வகுப்பாக குறைக்கப்பட்டு உள்ளது. இந்த கல்வியாண்டு முதலே இது நடைமுறைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here