நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்..!

0

சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது போல நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்துள்ளார்

அரசு முடிவு வரவேற்கத்தக்கது..!

இந்தியா முழுவதும் நிலவி வரும் கொரோனா நோய்ப்பரவல் காரணமாக ஜூலை 1ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த மத்திய இடைநிலைக் கல்வி வாரிய சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின்படியான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாணவர்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட இந்த முடிவு வரவேற்கத்தக்கதாகும்.

நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும்..!

அதேபோல், ஜூலை மாதம் நடைபெறவிருந்த சி.பி.எஸ்.இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதற்கு என்னென்ன காரணங்கள் கூறப்படுகின்றனவோ அந்த காரணங்கள் அனைத்தும் ஜூலை 26 ஆம் தேதி நடைபெறவிருக்கும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கும் பொருந்தும் எனவே நீட் தேர்வை ரத்து செய்வதே சிறந்த தீர்வாகும்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

NEET-exams
NEET-exams

அது மட்டுமின்றி நீட் தேர்வுகளையும், ஐஐடி தேர்வுகளையும் ஒப்பிடுவது சரியாக இருக்காது. ஐஐடி மாணவர் சேர்க்கை தேசிய அளவிலான தரவரிசையின் அடிப்படையில் மத்திய அரசால் மேற்கொள்ளப் படுவதாகும். எனவே பல்வேறு மாநிலப் பாடத்திட்டங்களிலும், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை சமன்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன.

எனவே நடப்பாண்டில் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். 12 ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையை மாநில அரசுகளே நடத்திக் கொள்ளவும் மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here