ரம்ஜான் நோம்புகஞ்சியை பள்ளிவாசலில் வழங்க அரசு அனுமதிக்க வேண்டும் – முஸ்லீம் லீக் வேண்டுகோள்.!

0

கொரோனாவால் ஊரடங்கு பிறப்பித்த நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே உள்ளனர். மேலும் மக்கள் அனைவரும் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது நோன்புப் பெருநாள் தொடங்கி உள்ளது. நோன்புக்கஞ்சியை பள்ளிவாசல்களில் காய்ச்சி வழங்க அனுமதிக்க வேண்டும் என முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் கோரிக்கை வைத்துள்ளார்.

முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன்

முஸ்லிம்களின் விழாவான ரம்ஜான் நோன்பு பெருநாள் தொடங்கியுள்ளது. இதனால் நோம்புக்கஞ்சியை காய்ச்ச அனுமதி அளிக்க வேண்டும் என்றும் மேலும் கஞ்சிக்கான பச்சரிசியை வழக்கம்போல் இவ்வருடமும் அரசு வழங்கிட வேண்டும் என முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் கோரிக்கை வைத்துள்ளார்.

It's time for 'Nonbu Kanji' - The Hindu

இதை பற்றி அவர் கூறியதாவது ”கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவளித்து வருகின்றோம். முஸ்லிம்கள் இஸ்லாமிய ஹிஜ்ரி மாதம் ரமலான் மாதம் முழுவதும் 30 நாட்களும் 14 மணிநேரம் உண்ணாமல், பருகாமல் நோன்பிருந்து இறைவனை வழங்கி வழிபட்டு, இல்லாதோருக்கு ‘ஜகாத்’ எனும் ஏழை வரி வழங்கி வருகின்றனர்.

கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு இப்படி ஒரு சிக்கலா?

இவ்வருட ரமலான் நோன்பு எதிர் வரும் ஏப்ரல் 25 -ம் தேதி தொடங்குகின்றது. கரோனா தடுப்பு ஊரடங்கு நடைமுறைகளை ரமலான் நோன்புக் காலங்களிலும் அரசின் நடவடிக்கைகளின்படி, மார்க்க அறிஞர்கள் கூறி வரும் வழிமுறைகளை முஸ்லிம் சமுதாயம் தொடர்ந்து பின்பற்றிட மீண்டும் வலியுறுத்துகிறோம்.

St. Alkmunds Church Duffield | Midweek/Other

நோன்புக் கஞ்சி காய்ச்சுவதற்கு பன்னெடுங்காலமாக தமிழ்நாடு அரசு பள்ளி வாசல்களுக்கு பச்சரிசி வழங்கி வருகின்றது. நோன்பிருப்பவர்கள் பள்ளிவாசல்களில் வழங்கும் கஞ்சியைப் பருகியே நோன்பைத் திறக்கின்றனர். சமூக இடைவெளியைப் பின்பற்றி பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சி காய்ச்சுவதற்கும், அதை மக்களுக்கு வழங்குவதற்கும் தமிழக அரசு அனுமதி வழங்கிடுமாறும், கஞ்சிக்கான பச்சரிசியை வழக்கம்போல் இவ்வருடமும் அரசு வழங்கிட கேட்டுக் கொள்கிறேன்”. இவ்வாறு காதர் மொகிதீன் கோரிக்கை வைத்துள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here