சட்டமன்ற தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கு?? மக்கள் மன்ற நிர்வாகி விளக்கம்!!

0

தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ரஜினியின் ஆதரவு யாருக்கு என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சட்டமன்ற தேர்தல்:

தமிழக்கத்தில் வரும் மே மாதத்துடன் சட்டப்பேரவையின் ஆயுட் காலம் முடிவுக்கு வர உள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் பிரச்சாரம், கூட்டணி குறித்த முடிவுகள் என தேர்தல் வேலைகளை மிக மும்முரமாக செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் அதிகாரிகளும் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இந்த சட்டமன்ற தேர்தலில் ரஜினி போட்டியிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் ரஜினிகாந்த் தனது உடல் நிலையை முன்வைத்து தான் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்று அதிரடியாக அறிவித்தார். இதனால் இவரது ரசிகர்கள் சோகமடைந்தனர். தற்போது வரப்போகின்ற சட்டமன்ற தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கு என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதனை ரஜினி மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு நிர்வாகியாகிய சுதாகர் தெரிவித்துள்ளார்.

#INDvsENG டெஸ்ட் – இரட்டை சதம் அடித்து அசத்திய ரூட்!!

இதுகுறித்து பேசிய அவர், வரப்போகின்ற சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் 100 சதவீதம் வரமாட்டார், அதே நேரத்தில் அவர் எந்த ஒரு கட்சிக்கும் தனது ஆதரவு தரமாட்டார் என்று தெரிவித்துள்ளார். மேலும் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் கட்சி தொடங்கப்போகிறார் என்ற தகவல் அனைத்தும் பொய்யானவை. அதுமட்டுமல்லாமல் அர்ஜுனன் மூர்த்தி கட்சி தொடங்கினால் அவருக்கும் ரஜினி மக்கள் மன்றத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here