#INDvsENG டெஸ்ட் – இரட்டை சதம் அடித்து அசத்திய ரூட்!!

0

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தற்போது தங்களது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் இரட்டை சதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளார்.

இந்தியா vs இங்கிலாந்து:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி நேற்று தங்களது முதல் டெஸ்ட் போட்டியை துவக்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி பேட்டிங்கில் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இங்கிலாந்து தரப்பில் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பர்ன்ஸ் 33 ரன்கள் மற்றும் சிப்லே 87 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடிய ரூட் முதல் நாள் ஆட்ட முடிவில் சதமடித்து அசத்தினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இன்று போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் துவங்கியது. இதில் ரூட்டுடன் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இவர்களது விக்கெட்டை வீழ்த்த இந்தியா அணியின் பௌலர்கள் குழம்பி வந்தனர். சிறப்பாக செயல்பட்ட ரூட் 150 ரன்களை கடந்து அசத்தினார். தன பங்கிற்கு ஸ்டோக்ஸ் அரை சதமடித்து அசத்தினார். சதமடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 82 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டோக்ஸ் நதீம்யிடம் வீழ்ந்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் அர்ஜுன் டெண்டுல்கரா?? குஷியில் ரசிகர்கள்!!

அதன்பின்பு போப் களம் வந்தார். தொடக்கத்தில் இருந்து தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் தனது இரட்டை சதத்தை அடித்து அசத்தியுள்ளார். மேலும் தனது 100வது டெஸ்டில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். தற்போது களத்தில் ரூட் மற்றும் போப் விளையாடி வருகிறார்கள். இந்தியா அணியின் பௌலர்கள் இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை எப்படி வீழ்த்துவது என்று குழம்பி போய் உள்ளார்கள்.

லைவ் ஸ்கோர்:

இங்கிலாந்து – 458/4

ரூட் – 212*
போப் – 24*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here