ரம்ஜான் பண்டிகையின் போது சிபிஎஸ்சி தேர்வு – எம்பி வெங்கடேசன் எதிர்ப்பு!!

0

இஸ்லாம் மதத்தினரின் புனித பண்டிகையான ரம்ஜான் அன்று சிபிஎஸ்சி தேர்வுகள் நடத்துவதற்கான அறிவிப்புகள் வந்திருப்பதால், அதற்கான தேதியை மாற்ற வேண்டும் என எம்பி வெங்கடேசன் கூறியுள்ளார்.

எம்பி வெங்கடேசன் எதிர்ப்பு

இஸ்லாமியரின் பண்டிகையான ரம்ஜான், மே மாதம் 14ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ரம்ஜான் பண்டிகை தேதிகளில் சிபிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்பட கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மத்திய கல்வித்துறை அமைச்சருக்கும், சிபிஎஸ்சி தேர்வு இயக்குனருக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஜீவாவை வீட்டோடு மாப்பிள்ளையாக்க சதி செய்யும் ஜனார்த்தனன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் நிலை??

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த கடிதத்தில், ‘மே மாதம் 14 ம் தேதி ரமலான் பண்டிகைக்கான விடுமுறையை மத்திய அரசு அறிவித்துள்ளது. ரமலான் பண்டிகையை பொறுத்தவரை பிறை தெரியும் நாள் பொறுத்து மாறும். இதனால் மே 14 ம் தேதிக்கு முன்னதாகவோ இல்லை மே 14 ம் தேதிக்கு பின்பாகவோ பிறை தெரியலாம். இத்தகைய சூழலில், 10ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பிற்கான சிபிஎஸ்சி பொது தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இஸ்லாமிய மாணவர்களின் முக்கியமான பண்டிகையின் போது அவர்களை பொது தேர்வுகள் எழுத சொல்லி நிர்பந்திப்பது சிபிஎஸ்சிக்கு அழகல்ல. அதனால் இத்தகைய நிர்ப்பந்தமான சூழல் உண்டாகும் முன்பே தேவுக்கான தேதிகளை மாற்றுமாறு கேட்டு கொள்கிறேன்’ என எழுதப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here