இந்து மதத்தை இழிவுபடுத்திய வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

0

இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக கூறி கிறிஸ்தவ மத போதகர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்துள்ளது. அதில் பேசிய நீதிபதி, மாற்று மதத்தின் மீது விஷம் கக்குவது மதத்தின் நோக்கம் அல்ல என்று அதிரடியாக கூறி இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கியுள்ளார்.

உயர் நீதிமன்றம்:

தற்போது நம் நாட்டில் மத போதகர்கள் சிலர் மற்ற மதங்களை பற்றி சற்று இழிவாக பேசிவரும் நிலை இன்னும் ஏற்பட்டு தான் வருகிறது. இதேபோல் தான் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற கிறிஸ்தவ மத கூட்டத்தில் கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸ் இந்து மத பற்றியும் கோவில்கள் பற்றியும் விமர்சித்து பேசியுள்ளார். இதனால் இவர் மீது தமிழகம் முழுவதும் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை ரத்து செய்ய கூறி மோகன் சி.லாசரஸ் மனு அளித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த வழக்கு தற்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மோகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, கடந்த 2016ம் ஆண்டு நடந்த கூட்டத்தில் பங்கேற்பாளரின் கேள்விக்கு மட்டும் தான் நான் பதிலளித்தேன், தவிர இந்து மதத்தை இழிவு படுத்தும் நோக்கம் எனக்கு அல்ல. நடந்த செயலுக்கு எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன், மேலும் இனி இதுபோல் சம்பவம் நடைபெறாமல் இருப்பதற்கு நான் உறுதி அளிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

உடல் எடை முற்றிலும் குறைத்து சிக்குன்னு மாறிய காமெடி நடிகை – வியப்பில் ரசிகர்கள்!!

இதனை தொடர்ந்து நீதிபதி இந்த வழக்கை ரத்து செய்வதாக அறிவித்தார். மேலும் பேசிய நீதிபதி மாற்று மதத்தின் மீது விஷத்தை கக்குவதோ, வெறுப்பை உமிழ்வதோ மதத்தின் நோக்கம் அல்ல, மத நம்பிக்கையின் நோக்கமும் அல்ல என்று கூறினார். மேலும் மத போதர்கள் மிகுந்த பொறுப்புடன் பேச வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதி, பிற மதங்களை இழிவுபடுத்த கூடாது என ஏசுநாதர் கூறியுள்ளதையும் குறிப்பிடுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here