பியர் கிரில்ஸின் மேன் வெர்சஸ் வைல்ட் (Man Vs Wild) நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்..!

0

பிரிட்டன் முன்னாள் ராணுவ வீரர் எட்வர்ட் மைக்கேல் கிரில்ஸ் (பியர் கிரில்ஸ்) பெங்களுருவில் நடத்திய படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.

பியர் கிரில்ஸ் நடத்தும் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி உலகம் முழுவதும் மிக பிரபலமான ஒன்றாகும். இந்த நிகழ்ச்சியில் வனப்பகுதியில் பிரபலங்களுடன் இவர் சுற்றி உயிர் வாழத் தேவையான சில ஆலோசனைகளை வழங்குவர்.உத்தரகாண்டில் உள்ள ஜிம் கோர்பெட் தேசிய பூங்காவில் உள்ள வனப்பகுதிக்குள் பிரதமர் நரேந்திர மோடியை அழைத்து சென்றார். இந்த நிகழ்ச்சி பலராலும் பாராட்டப்பட்டது.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

மேலும் இவர் அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் நடிகர் பென் ஸ்டில்லர் ஆகியோரும் இந்த ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுள்ளனர்.

நேஷனல் ஜியோக்ரபி சேனல் ‘ரன்னிங் வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ என்ற பெயரில் இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசனை ஒளிப்பரப்ப இருப்பதாக அறிவித்தது. இதில், ஹாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பந்திபூர் புலிகள் வனப்பகுதியில் இதற்கான படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் பியர் கிரில்ஸ் உடன் இணைந்து நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார். மேலும் வரும் 30ம் தேதி நடக்கும் படப்பிடிப்பில் நடிகர் அக்சய் குமார் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சி கூடிய விரைவில், டிஸ்கவரி அல்லது நேஷனல் ஜியோகிராபி சேனலில் ஒளிப்பரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here