ரஜினிகாந்த் வீட்டின் முன் கூடிய ரசிகர்கள் – பரபரப்பில் போயஸ் கார்டன்!!

0

தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது அரசியலில் இறங்க போவதாக சொல்லிக்கொண்டிருக்கும் ரஜினிகாந்த் உடல்நிலை காரணமாக மக்களை எதிர்கொண்டு எப்படி பிரச்சாரம் செய்வது என்று ஆலோசித்து வருவதாக அவரின் பெயரில் அறிக்கை வெளியானது. ஆனால் தற்போது அந்த அறிக்கை தன்னுடையது அல்ல என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த்

நமது சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றி கடந்த இரண்டு நாட்களாக சென்னை முழுவதும் தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. சிறுநீரக கோளாறு காரணமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்த ரஜினி தற்போது அரசியல் தொடர்பாக மக்களை சந்திக்க போவதாக அறிக்கை சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதன் காரணமாக நமது சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் ட்விட்டரில் எனது உடல் நிலை குறித்த தகவல் தவிர மற்ற அனைத்து செய்திகளும் உண்மை அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இது தொடர்பாக நமது சூப்பர் ஸ்டார் கூடிய விரைவில் மக்களை பார்த்து அரசியலில் ரசிகர்கள் என்ன முடிவு செய்தாலும் அதை நான் ஏற்பேன் என்றும் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்து சரியான நேரத்தில் தனது அரசியல் நிலையை பற்றி தெரிவிப்பேன் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் புது புது வாசகங்கள் கொண்ட போஸ்டர்கள் சுவர் முழுவதும் ஒட்டப்பட்டு உள்ளன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த சில வருடங்களாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் உடலில் ஒன்றன் பின் ஒன்றாக பல நோய்கள் வந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் அரசியலில் எவ்வாறு ஆட்சி செய்வர் என்று பல கேள்விகள் மக்கள் மனதில் எழுந்து கொண்டு இருக்கிறது. நமது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ரசிகர்கள் ஏராளம் அவரை அரசியலுக்கு வர சொல்லி தூண்டும் வகையில் போஸ்டர்களில் எண்ணற்ற வாசகங்களை எழுதி சுவர், ஆட்டோ என பல இடங்களிலும் ஒட்டியுள்ளனர். போயாஸ் கார்ட்ன் முன்பு பல ரசிகர்கள் அவரது முகம் பதித்த போட்டோ மற்றும் வாசகங்கள் கொண்ட உடைகளை அணிந்துவாறு வலம் வருகின்றனர்.

“நீக்க வாங்க ரஜினி! எங்க ஓட்டு உங்களுக்குத்தான்” போன்ற வாசகங்கள் நமது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ரசிகர்களின் அன்பு வெளிப்படுகிறது. மேலும் சில போஸ்டர்களில் “அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம்” போன்றவை மக்களை என்ன நடக்கப் போகிறது என எதிர்பார்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. நமது சூப்பர் ஸ்டார் அரசியலில் எவ்வாறு ஆட்சி செய்யப் போகிறார் என்பதை பற்றி பொறுத்து இருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here