ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படம் 2021ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
அண்ணாத்த ரிலீஸ்:
சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினி நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’. தர்பார் படத்திற்கு பின்னர் ரஜினி நடித்து வரும் இந்த திரைப்படம் கிராமத்து கதை அம்சத்தை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. இதில் ரஜினியுடன் சூரி, குஸ்பு, நயன்தாரா, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜேஷ், சதீஷ் என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
அக்டோபர் மாதம் வெளியாக இருந்த இத்திரைப்படம் கொரோனா பாதிப்பால் முடங்கிய ஷூட்டிங்கால் தள்ளிப்போனது. எனவே பேட்ட, தர்பார் படங்களைத் தொடர்ந்து அண்ணாத்த திரைப்படமும் பொங்கல் அன்று வெளியாக உள்ளது. இந்த தகவல் அறிந்து ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |