ஆதியின் அப்பா உயிரை தக்க சமயத்தில் காப்பாற்றிய ஜெஸ்ஸி.., கூனிக்குறுகி நின்ற சிவகாமி குடும்பம்!!

0

ராஜா ராணி சீரியலில் தற்போது எதிர்பாராத பல திருப்பங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது சிவகாமிக்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று காத்து கொண்டுள்ளது.

ராஜா ராணி 2

ராஜா ராணி சீரியலில் ஜெஸ்ஸிக்கும் ஆதிக்கும் திருமணம் நடக்குமா?? நடக்காதா?? என்பதே பெரிய கேள்விக்குறியாக உள்ளது. சிவகாமி குடும்ப கௌரவத்தை நினைத்து கொண்டு ஜெஸ்ஸியை ஆதிக்கு திருமணம் செய்து வைக்க மறுக்கிறார். ஆதியின் உண்மை முகம் வெட்டவெளிச்சமான நிலையிலும் சிவகாமி இப்படி நடந்துகொள்வது பலரையும் கடுப்பாக்கியுள்ளது.

இப்படி இருக்க குடும்பத்தில் பெரிய துயர சம்பவமே நடந்துள்ளது. அதாவது ரவி வெளியில் போன சமயத்தில் அவருக்கு விபத்து நடந்து விட இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இது சிவகாமிக்கு தெரிய வர குடும்பமே மருத்துவமனைக்கு ஓடுகிறது. அங்கு ரவிக்கு ரத்தம் அதிகமாக வெளியேறியதால் AB- ரத்தம் தேவைப்படுவதாக சொல்கின்றனர்.

அப்பொழுது சந்தியா ஜெஸ்ஸியும் அதே ரத்தம் தான் என்று சொல்கிறார். அவளை வேகமா வர சொல்லு என்று சிவகாமியும், ரவியின் அம்மாவும் கதறுகின்றனர். ஜெஸ்ஸியும் வந்து ரத்தம் கொடுக்கிறார். அப்பொழுது சந்தியா சிவகாமிக்கு, ரவியின் அம்மாவிற்கும் பாடம் புகட்ட எண்ணி ஜெஸ்ஸியை வெளியில் அழைத்து வருகிறார்.

ரத்தம் கொடுக்கும்போது மட்டும் உங்களுக்கு மதம் குறுக்க வரலையா?? கல்யாணம் பண்ணனும்னா மட்டும் மதத்தை பத்தி பேசுறீங்க என்று சொல்கிறார் சந்தியா. இதனால் சிவகாமி கூனிக்குறுகி நிற்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here