கடுமையாக்கப்பட்ட கட்டுப்பாடுகள்.. இரட்டை அர்த்த பாடல்களுக்கு தடை – உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு!!

0
கடுமையாக்கப்பட்ட கட்டுப்பாடுகள்.. இரட்டை அர்த்த பாடல்களுக்கு தடை - உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு!!

கோயில் திருவிழாக்களில் நடைபெறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் குறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

கோவில் திருவிழா:

ஒவ்வொரு ஆண்டும் கோவில் திருவிழாக்களை மக்கள் நடத்தி வருகின்றனர். கோவில் திருவிழா என்றால் ஆடல் பாடல், டான்ஸ், பாட்டு என மக்களை பொழுது போக்கும் நிகழ்ச்சிகள் இருப்பது வழக்கத்தில் ஒன்று. ஆனால் இந்த நிகழ்ச்சிகள் கிராமப்புறங்கள் மட்டுமின்றி நகரங்களிலும் இரவு நேரங்களில் மட்டுமே நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சிக்கு சிலர் எதிர்ப்பு கிளம்பியதால் சில இடங்களில் இது நிறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் ஆடல் பாடல் இரவில் நடத்த கோரி நீதிமன்றத்தில் மனு சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிட்டுள்ளது. அதாவது, எல்லா ஊர் கோவில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சி இரவு 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும். அதுமட்டுமின்றி டான்ஸ் ஆடும் நடனர்கள் கிழிந்த ஆடைகளை உடுத்த கூடாது.

இந்த விதி பெண்களுக்கு தெரிந்தால் போதும்.. கவலையே இல்ல – ரயில் பயணிகளுக்கு சூப்பர் தகவல்!!

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் இரட்டை அர்த்த பாடல்கள் மற்றும் கட்சி பாடல்கள் போன்ற பாடல்களை தவிர்க்க வேண்டும். அதனை தொடர்ந்து போதை பொருட்களை அருந்த கூடாது மற்றும் மதங்கள் குறித்து எந்த பேனர்கள் வைக்க கூடாது. குறிப்பாக மக்கள் போக்குவரத்திற்கு எந்த பிரச்சனையும் ஏற்படக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here