ஜீலின்ஸ்கி ஆட்டத்தால் வீழ்ந்த லிவர்பூல்.., சரியான ஆட்டம் நா இது தான் பா…, கோல் மழை பொழிந்த நேபோலி!!

0
ஜீலின்ஸ்கி ஆட்டத்தால் வீழ்ந்த லிவர்பூல்.., சரியான ஆட்டம் நா இது தான் பா..., கோல் மழை பொழிந்த நேபோலி!!
ஜீலின்ஸ்கி ஆட்டத்தால் வீழ்ந்த லிவர்பூல்.., சரியான ஆட்டம் நா இது தான் பா..., கோல் மழை பொழிந்த நேபோலி!!

UEFA ஆண்கள் சாம்பியன் ஷிப் தொடருக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் நேபோலி அணி வீரர் ஜீலின்ஸ்கி தொடர்ந்து கோல் மழை பொழிந்ததன் மூலம் அணியை வெற்றி பெறச் செய்துள்ளார்.

சாம்பியன்ஸ் லீக்!

ஆண்களுக்கான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடருக்கான குரூப் ஏ பிரிவில் லிவர்பூல், ரேஞ்சர்ஸ், அஜாக்ஸ் ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளனர். இதில் நேபோலி மற்றும் லிவர்பூல் அணிகளுக்கு இடையிலான தகுதி சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து சிறப்பாக விளையாடி வந்த நேபோலி அணி வீரர் ஜீலின்ஸ்கி 5-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி மற்றும் 47 வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்றினார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதனால் ஆட்டம் களைகட்ட லிவர்பூல் அணியை சேர்ந்த லூயிஸ் டியாஸ் முதல் கோல் அடித்தார். ஆனால் இதன் பிறகு இந்த அணிக்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதை பயன்படுத்தி கொள்ள முடியவில்லை. இதனால் நேபோலி அணி வீரர்கள் Piotr Zielinski மற்றும் André-Frank Zambo Anguissa ஆகியோர் அடுத்தடுத்து கோல்களை பதிவு செய்தனர். இதனால் ஆட்டத்தின் இறுதியில் லிவர்பூல் அணி 4 – 1 என்ற கோல் கணக்கில் நேபோலி அணியிடம் தோல்வியடைந்தது.

நேபோலி அணியின் வெற்றிக்கு வீரர் ஜீலின்ஸ்கி தான் முக்கிய காரணமாக இருந்துள்ளார். இவர் தனது தனித்துவமான ஆட்டத்தின் மூலம் எதிரணியை எளிதாக வீழ்த்தி 2 கோல் அடித்து வெற்றி பெற வைத்துள்ளார்.இந்த அணி அடுத்ததாக ரேஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இதே பிரிவில் இடம்பெற்றுள்ள அஜாக்ஸ் மற்றும் ரேஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 4 – 0 என்ற கணக்கில் அஜாக்ஸ் அணி வெற்றி பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here