குளிர் காய்ச்சல் வந்ததை போல நடிக்கும் சந்தியா – பரிதவித்து போன சரவணன்! ரொமான்ஸ் காட்சிகளுடன் ராஜா ராணி 2!!

0

ராஜா ராணி சீரியலில் தற்போது சரவணன் எதையோ பறிகொடுத்தது போலவே இருக்க சிவகாமி அதனை நினைத்து கவலை பாடுகிறார். மேலும் பார்வதிக்கு மாப்பிள்ளை வேறு பார்க்க ஆரம்பிக்கிறார்.

ராஜா ராணி

ராஜா ராணி சரவணன் மற்றும் சந்தியாவிற்கு சண்டையுடனே நகர்ந்து கொண்டுள்ளது. ஆனாலும் சரவணன் எந்த இடத்திலும் சந்தியாவை விட்டு கொடுக்கவில்லை. இன்றைய எபிசோடில் சந்தியா அனைவர்க்கும் சமைக்க ஆரம்பிக்கிறார்.

சந்தியா சமைத்தார் என்று தெரிந்ததும் அனைவரும் பயப்படுகின்றனர். சாப்பாடு எப்படி இருக்க போகிறதோ என்று புலம்ப அவர்கள் நினைத்த படியே சாப்பாடை வாயில் வைக்க முடியாத அளவிற்கு உள்ளது. இதனால் பார்வதி திட்ட ஆரம்பிக்க சிவகாமி இன்றைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் செய்து சாப்பிட்டு தான் ஆக வேண்டும் என்று சொல்கிறார்.

மேலும் பார்வதியிடம் உனக்கு மாப்பிள்ளை பார்த்து கொண்டிருப்பதாகவும், இதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணி தான் இருக்கணும், அப்பறம் என்ன தான் சொல்லுவாங்க என்று சொல்கிறார். இதனால் பார்வதி அதிர்ச்சியாகிறார். அடுத்ததாக சந்தியா மற்றும் அர்ச்சனா உட்காந்து சாப்பிட அர்ச்சனாவால் அந்த சாப்பாட்டை சாப்பிட முடிவில்லை.

அடுத்ததாக ரவி வந்து சரவணன் சரியில்லை என்றும் அவனுக்கு என்ன பிரச்சனைன்னு பாரு என்றும் கூறுகிறார். அடுத்ததாக சிவகாமியும் ரவியும் அமர்ந்து பேசிகொண்டுள்ளனர். அப்பொழுது தனக்கு கல்யாணம் ஆன புதிதில் உடல்நிலை சரியில்லாத போது என்னை ரொம்ப நல்ல கவனிச்சுக்கிட்டிங்க அப்போ தான் உங்க அன்பை புரிஞ்சிக்கிட்டேன் என்று சொல்கிறார். இதனை சந்தியா கேட்டு விடுகிறார்.

அப்போ நமக்கு உடம்பு சரியில்லைன்னா சரவணன் பார்ப்பாரான்னு பாப்போம் என்று சரவணனை தேடுகிறார். சரவணன் உள்ளே வர குளிர் காய்ச்சல் இருப்பது போல நடிக்கிறார். சரவணன் அதனை பார்த்து துடித்து போகிறார். போர்வையை போர்த்தி விட்டு ஆவி பிடிக்க சுடுதண்ணீர் எடுத்து வருகிறார்.

சந்தியா ஆவி பிடிக்க மாட்டேன் என்று ஆடம் பிடிக்க வற்புறுத்தி ஆவி பிடிக்க வைக்கிறார். சரவணன் தன் மீது வைத்திருக்கும் அன்பை நினைத்து சந்தோஷமடைகிறார். சரவணன் நன்கு தூங்கி விட சந்தியா அவரை ரசிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பின்பு மீண்டும் ராஜா ராணியில் ரொமான்ஸ் காட்சிகள் இடம் பெற்றது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here