சூர்யா, விஜய் சேதுபதி உட்பட பல முக்கிய பிரபலங்கள் நடித்த ‘நவரசா’ ட்ரைலர் வெளியீடு.. லைக்ஸை தெறிக்கவிடும் ரசிகர்கள்!!

0

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யா, விஜய் சேதுபதி, சித்தார்த், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ள நவரசா அந்தாலஜி திரைப்படத்தின் ட்ரைலர் இன்று (ஜூலை 27,2021) படக்குழுவால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

தமிழ் சினிமா ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் படங்களை தருவதில் இயங்குனர் மணி ரத்னமும் ஒருவர். அவரும் ஜெயேந்திராவுடன் இணைந்து 9 கதைகளை மையமாக கொண்ட நவரசா என்கிற ஆந்தாலஜி வெப் தொடரை தயாரித்து உள்ளனர்.

இந்த வெப் தொடரை கௌதம் வாசுதேவ் மேனன் உட்பட 9 முன்னணி இயக்குனர்கள் இயக்கியுள்ளனர்.  இந்த 9 படங்களில் சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, சித்தார்த், ரேவதி, பார்வதி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் OTT தளத்தில் வெளியாக உள்ளது.

சில நாட்களுக்கு முன் நவரசா டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது. தற்போது நவரசா வெப் தொடரின் டிரைலர் இன்று காலை 9:09 மணிக்கு வெளியானது. இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் இருந்து பாசிடிவ் ரெஸ்பான்ஸை பெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here