ராகு தோஷம் முழுமையாக நீங்க வேண்டுமா?? ராகு கால துர்க்கை அம்மன் பூஜை!!

0
durga

ஒருவரது ஜாதகத்தில் அவரின் முன் ஜென்ம பாவ புண்ணியங்கள் அடிப்படையிலேயே அவரது கஷ்ட நஷ்டங்கள் அமைந்திருக்கும். மேலும் ராசி கட்டத்தில் ராகு அமர்ந்திருக்கும் இடத்தை பொறுத்தே ராகு, கேது தோஷத்தை கணக்கிட முடியும். இப்பொழுது ராகு தோஷத்தை நீக்க என்ன வழிபாடுகளை மேற்கொள்ளலாம் என்பதை இந்த பதிவில் காணலாம்.

ராகு தோஷம் நீங்க..

ராகு கால வழிபாட்டிற்கு உகந்த நாளாக கருதப்படுவது ஞாயிற்றுக் கிழமை ஆகும். ஏனெனில் ராகுவின் உடலில் தான் விஷம் இருக்கும். அவர் வாலில் இருக்காது. ஏனெனில் ஞாயிற்றுக் கிழமை சூரியன் மறையும் வேளையில் ராகுவின் வாலில் அமிர்தம் நிறைந்திருக்கும். எனவே தான் 4.30 மணி முதல் 6 மணிக்குள் துர்க்கை அம்மனை நினைத்து வழிபட்டால் ராகுவால் ஏற்பட்ட தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.

rahu kethu dhosam
rahu kethu dhosam

இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக் கிழமையில் ராகு காலத்தில் காலத்தில் 4.30 மணி அளவில் எலுமிச்சையை பிழிந்து அதில் எண்ணெய் ஊற்றி 5 திரிகள் போட்டு விளக்கை ஏற்ற வேண்டும். 2 விளக்குகள் ஏற்ற வேண்டும். அம்மானுக்கு மல்லிகை பூ அல்லது மஞ்சள் சாமந்தி பூ சாற்ற வேண்டும்.

கடன் பிரச்சனையை முழுமையாக தீர்க்க – ருணஹர கணபதி வழிபாடு!!

இந்த விளக்கின் ஒளியில் துர்க்கை அம்மனை நினைத்து மஞ்சள் குங்குமம் வைத்து ‘ஓம் துர்கா தேவியே சரணம்’ என்று கூறி வழிபட வேண்டும். அதன் பிறகு துர்க்கையை 3 சுற்றுகள் சுற்றிவிட்டு 20 நிமிடங்கள் அங்கேயே அமர வேண்டும். அதன் பின் 21 வது நிமிடம் அங்கிருந்து வெளியேற வேண்டும். இப்பொழுது வீட்டிற்கு சென்று தீபம் ஏற்றி கற்பூரம் ஏற்றி வழிபட வேண்டும். வீட்டில் தீபம் அணையும் வரை வீட்டை விட்டு வெளியேற கூடாது. இவ்வாறு 9 வாரங்கள் தொடர்ந்து செய்து வந்தால் ராகு தோஷம் நீங்கி ராகுவால் ஏற்பட்ட சங்கடங்களும் நீங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here